/* */

தொடர்மழை: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர்மழை: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்
X

கோப்பு படம் 

அரியலூர் மாவட்டத்தில், நடப்பு 2021ஆம் ஆண்டு சிறப்பு பருவத்தில், திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்திட அரசு உத்திரவிட்டுள்ளது. தற்போது, அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வருடம் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர்காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக பயிர்காப்பீடு செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ 295.50 - கடைசி தேதி: 15.11.2021, நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ 537- கடைசி தேதி: 15-12-2021, ஆகும்.

Updated On: 5 Nov 2021 12:36 PM GMT

Related News