/* */

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது

வரும் 10ம் தேதி அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை தமிழக முதல்வரால் ஊக்குவித்து கௌரவிக்கப்படுகிறது.

அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2022 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர், 6) சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அரியலூர் அவர்களிடமிருந்து பெற்று பூர்த்தி செய்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களுடன் 10.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும், விண்ணப்பப் படிவங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Jun 2022 7:12 AM GMT

Related News