11-ம் வகுப்பு தேர்வு முடிவு: மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழகத்தில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று (மே.,19) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மதியம் 2 மணியளவில் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிகளில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 221 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 85 மாணவர்கள், 11 ஆயிரத்து 541 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 626 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதில் 9 ஆயிரத்து 558 மாணவர்கள், 11 ஆயிரத்து 241 மாணவிகள் என 20 ஆயிரத்து 799 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 96.18 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 94.77 சதவீதமும், மாணவிகள் 97.40 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் 96.18 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu