/* */

திருப்பூர் முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா; பக்தர்கள் பரவசம்

Tirupur Murugan Kovil-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கதித்தமலை முருகன் கோவில், அலகுமலை முருகன் கோவில், சிவன்மலை முருகன் கோவில், கொங்கணகிரி முருகன் கோவில்களில், தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர் முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா; பக்தர்கள் பரவசம்
X

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த தைப்பூசத் தேரோட்ட விழா காட்சிகள்.

Tirupur Murugan Kovil-திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், முருகன் கோவில்களில் தேரோட்டம் நடந்தது.


ஊத்துக்குளி, கதித்தமலை முருகன் கோவில்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று பரிவேட்டை நடைபெற்றது. நாளை இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

வரும் 8-ம் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சுவாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.

வருகிற 9-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன், தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

பொங்கலூர், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில்

இக்கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினசரி உபயதாரர்கள் சார்பாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இன்று மாலை பரிவேட்டை நடந்தது, நாளை (7-ம் தேதி) சுவாமி திருவீதி உலாவும், 8-ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

இக்கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ம் தேதி காலை 6 மணிக்கு, வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.பின்னர் சுவாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். மதியம் ஒரு மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை திருத்தேர் நிலையை அடைகிறது. வருகிற 10-ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ம் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ம் தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்த வாரியும், 14-ம் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சுவாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில்

இக்கோவிலில் தைப்பூச விழா 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி கிரிவலம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில், தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று பரிவேட்டை, தெப்போற்சவம், குதிரை வாகன பவனி நடந்தது. நாளை மகா தரிசனம், அன்னதான நிழ்ச்சியும், 8ம் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.


கொங்கணகிரி முருகன் கோவில்

திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த கந்த சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் 'அரோகரா' கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 April 2024 5:26 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்