மீன ராசிக் காரர்களுக்கு செவ்வாய்கிழமை கொடுக்கல்-வாங்கல் ஆகாதுங்க..!
Pisces Zodiac in Tamil
Pisces Zodiac in Tamil-மீன ராசிக்காரர்கள் கலை, சங்கீதம், இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதில் அவர்கள் அக்கறை காட்டினால் சிறப்பாக வளர்வார்கள். சாஸ்திரம், புகைப்படத் துறை, விஞ்ஞானம், அழகுக்கலை போன்ற துறைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
எப்படிப்பட்ட வேலை
மீன ராசிக் காரர்களின் தொழில் ஸ்தானம் அவர் பிறந்த தேதி கிரகத்தை கொண்டு அமையும். இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் கலை சங்கீதம் முதலியவற்றில் உயர்ந்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மொழி, கடல் மற்றும் கற்பனை ரசனை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாகித்தியத்தில் கேள்வி கேட்பதில் வல்லவர். இவரின் ஆற்றலில் பங்கேற்க பலர் வந்தடைவார்கள். மீன ராசிக்காரர்கள் தனியார் கம்பெனிகளில், அழகு படுத்துதல், கப்பற் படை வீரர்களாகவும் சிறந்து விளங்குவர். இவர்கள் பிசினஸ் செய்வதாக இருந்தால் அவர்கள் தொழில் செய்யும் இடம் கிழக்கு, மேற்கு இடங்களில் அமைய வேண்டும். மேலும் 2, 4 மற்றும் 6 அறைகள் இருக்க வேண்டும். கடற்கரை ஓரம் மற்றும் நதிக் கரை ஓரமாக அமைந்திருக்க வேண்டும். பிறந்த இடத்திலிருந்து வெகு தொலைவு சென்று வாழ்வில் மின்னுவர். மீன ராசிக் காரர்களிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அமைதி இருக்காது.
குணாதிசயம்
மீன ராசிக்காரர்களின் குணத்தின் படி, இது என்னால் முடியாது, இது கடிமானது என்ற சொல்லுக்கே இடம் கிடையாது, அவர்களே முயற்சி செய்தல், அவர்களது குணம் எப்பொழுதும் வித்தியாசமாகவும், நல்ல புத்தி கூர்மையான, தனக்கு,தனக்கு என்று அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளும் மனம் உடையவர்கள்.
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக்காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களைக் கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது.
இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்
தொழில்
மீன ராசிக்காரர்கள் கதை எழுதுவது, கதை கேட்பது, புகைப்படங்கள் எடுப்பது, படம் வரைவது, நல்ல படங்களை பார்ப்பது, கண்ணாடி பொருட்களை சேர்ப்பது பொழுதுபோக்காக இருக்கும். நடனம், பாட்டு, தார்மீக வேலைகள், படித்தல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டுகளை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
திருமணம்
மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. சிலருக்கு முதல் திருமணத்தில் நிம்மதி கிடைக்காமல் மறுமணம் செய்து நிம்மதியான சுகத்துடன் வாழக் கூடியவர்.
குடும்ப வாழ்க்கை
மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். அதிகமாக நிம்மதி நிறைந்து இருக்கும். வீ£ட்டில் இருப்பவர்கள் எப்படி இருந்தாலும் மீன ராசிக் காரர்கள் யதார்த்தமாக இருப்பார்கள். மீன ராசிக்காரர் தந்தை மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தாய் மீது மதிப்பு குறைவாகவே காணப்படும்.
பலவீனம்
மீன ராசிக் காரர்கள் மிகவும் இரக்கம் மற்றும் கொண்ட கூச்ச சுபாவம் உடையவர். எதையும் எளிதில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். யாரையும் பாராட்ட மாட்டார்கள். பிறரை ஏமாற்றுவார். இவரும் ஏமாறுவார். விழாக்களில் முக்கியமானதை மட்டும் கொண்டாடுவார். முக்கியமான காரியங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர். மற்றவரை கவரும் குணம் கொண்டவர். தான் கவிஞன் என்ற எண்ணம் கொண்டவர். இவரை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.
இவர் முக்கியமான காரியங்களில் மட்டும் ஈடுபடக் கூடியவர். இந்த ராசிகாரர்களுக்கு மற்றவர் மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். இவர் சித்தாந்தத்தில் உயர்ந்து நின்றாலும் உண்மையில் மறைந்து இருப்பார். இவர் எளிமையான உடையில் இருப்பார். நண்பர்களிடம் நேர்மையாக இருக்கமாட்டார். மற்றவர்களின் வாகனங்களை வாங்க மாட்டார். அதிகமாக யோசிக்கக் கூடியவர். வெற்றி பெறக் கூடியவர். உலகத்தில் யதார்த்தமாக வாழக் கூடியவர்.
கனவு உலகத்தில் இருக்க கூடியவர். இவரின் கனவு பலிப்பதில்லை. இவர் இரகசியங்களை காப்பாற்றக் கூடியவர். இவர் வெற்றி பெற்ற செயல்களில் கஷ்டங்கள் நிறைந்து இருக்கும். அன்பு இவரின் மனதை மாற்றும். இவர்கள் கணித மேதையாகவும் இருப்பார்கள். நோய்கள் அடிக்கடி வந்து போகும்.
ஆரோக்யம்
மீன ராசிக்காரர்களுக்கு ரத்தக்கொதிப்பு, பார்வைக் கோளாறு, காலில் வலி, மார்பக வலி, சர்க்கரை நோய், தலை வலி மற்றும் பல உடல் உபாதைகள் வந்து தாக்கும். யாருக்கு வியர்வை அதிகமாக வெளியேறுகிறதோ அவர்கள் நோயற்றவர்களாக இருப்பார்கள்.
ராசியான நாள்
மீன ராசிக் காரர்கள் கடவுளுக்கே குருவானவர். இவர்களுக்கு ராசியான தினம் வியாழக்கிழமை. இந்த நாள் விசேஷமான நாள். இவர்கள் ஞாயிற்றுக் கிழமையும் திங்கட்கிழமையும் கூட ராசியான நாட்களாக அமைகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை ராசி இல்லை. செவ்வாய் கிழமையில் கொடுக்கல் வாங்கல் கூடாது. இந்த நாள் இவர்களுக்கு துக்கமான நாள். இந்நாட்களில் புது வேலைகளை தொடங்கக் கூடாது.
பிசினஸ்
மீன ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வம் இருக்காது. இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறந்தது. புதிய ஆடை வடிவமைப்பு, சங்கீதம் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.
மீனம் ஒட்டுமொத்த பார்வை
மீன ராசிக்காரர்கள் நல்ல மனப்பக்குவத்தை உடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் யாரை நண்பனாக்கி கொள்கின்றனரோ அவர்கள் மிகவும் பாக்கியசாலி இவர்கள் நற்குணம் மிகுந்தவர்கள். இவர்களுக்கு சங்கடங்கள் நேரும் சமயத்தில் புஷ்பராகம், கோமேகதம் அல்லது முத்தை மோதிரமாக அணிந்து கொள்ளுதல் அல்லது பக்கத்தில் வைத்துக் கொண்டாலும் துன்பம் விலகும்.
இதை செய்தால் சுபம்
திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் சத்திய நாராயணனை பூஜை செய்தல் வேண்டும். அல்லது 16 திங்கட்கிழமை விரதம் இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரம் படித்தல் வேண்டும். வியாழக் கிழமையில் விரதம் இருந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கண்ணாடி, பருப்பு, பொருட்கள், நெய், நீலநிற துணி, புத்தகம், நீலநிறப் பூ, பழம் முதலியவற்றை தானம் செய்தல் வேண்டும். "ஓம் ஹங் ஹி ஹெளசா ப்ருஹாஸ்பதே நமஹ" என்ற மந்திரத்தை 19000 முறை உச்சரிக்க வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu