ஜாதக கட்டத்தை எப்படி சரிபார்க்கலாம்..? வாங்க..தெரிஞ்சுக்கோங்க..!
![ஜாதக கட்டத்தை எப்படி சரிபார்க்கலாம்..? வாங்க..தெரிஞ்சுக்கோங்க..! ஜாதக கட்டத்தை எப்படி சரிபார்க்கலாம்..? வாங்க..தெரிஞ்சுக்கோங்க..!](https://www.nativenews.in/h-upload/2022/08/01/1570212-triangle.webp)
jathagam kattam explanation in tamil-ஜாதக கட்டம் விளக்கம்.(மாதிரி படம்)
லக்கினம் திரிகோணம் கேந்திரம் என்றால் என்ன?
Jathagam Kattam Explanation In Tamil-ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். இந்த ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு வீடு எனப்படும். லக்கினம் என்பதை ஜாதக கட்டத்தில் "ல" என்று குறிப்பிடபட்டிருக்கும். அது எங்கு உள்ளதோ அதுவே முதலாம் வீடு மேஷ ராசியிலிருந்து தொடங்கி 2,3,…12ம் வீடு வரை மற்ற கிரகங்களில் அமைப்புகளை கணக்கிடனும்.
திரிகோணம்
திரிகோணம் என்பது லக்கினத்திலிருந்து 1, 5, 9 ஆகிய 3 வீடுகள் ஆகும்.
கேந்திரம்
கேந்திரம் என்பது லக்கினத்திலிருந்து 1 , 4 , 7, 10 ஆகிய 4 வீடுகள் ஆகும்.
மறைவு ஸ்தானம்
இதில் மறைவு ஸ்தானம் என்பது 3, 6, 8, 12 ஆகிய 4 வீடுகளும் ஆகும். பொதுவாக இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பலம் குறைந்து காணப்படும். இருப்பினும் இதில் சில கிரகங்களுக்கு விதி விலக்கு உண்டு.
எடுத்துக்காட்டாக சுக்ரன் 12ம் வீட்டில் இருந்தால் மறைவாகாது. மாறாக அவர் நல்ல பலன்களையே தருவார். அதுபோல சூரியன் 3, 6 ம் வீடுகளில் அமைவதாகும்.
இதில் முதலாம் வீடு திரிகோணம் மற்றும் கேந்திர அமைப்புகளை பெறுகிறது ஆதலால் முதல் வீட்டில் எந்த கிரகம் நின்றாலும் அது மிகுந்த பலத்துடன் இருக்கும். இது கேந்திர திரிகோண அமைப்பாகும்.
2 மற்றும் 11ம் வீடுகளில் இருந்தால் நல்ல பலனையே தரும். இதில் 11ம் வீட்டில் சுபர் பாவ கிரகங்கள் எவை இருந்தாலும் நன்மையை மட்டுமே செய்யும்.
3ம் வீட்டில் கிரகங்கள் அமைவது சுமாரான பலன்களையே தரும்.
jathagam kattam explanation in tamil-6 ,8 ,12ம் வீடுகளில் கிரகங்கள் அமர்வது அவ்வளவு சிறப்பாக சொல்ல முடியாது. சுப கிரகங்கள் இந்த வீடுகளில் இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு நல்ல பலன்களை வழங்க முடியாது. இருப்பினும் மேற்கூறியவாறு இதில் சில விதி விலக்கும் உண்டு. சுக்ரனுக்கு மட்டும் 12ம் வீடு மறைவு வீடாகாது. அதுபோல சூரியன், 3 மற்றும் 6 ம் வீடுகளில் அமர்வதால் நல்ல பலன்களே கிட்டும். மேலும் 6, 8, 12 ம் இடத்தில் குரு பார்வை இருப்பின் பலன்கள் மாறுபடும்.
ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால் அல்லது மறைவு வீடுகளில் இருந்தால் பகை கிரங்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தால் அந்த கிரகம் சரியான விளைவுகளைத் தராது என்று பொருள்.
ஒவ்வொரு லக்கினத்தையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
திருமண பொருத்தம் பார்க்கும் முறையில் இந்த லக்கின ஒப்பீடு பார்க்கப்படும்.
நெருப்பு ராசிகள்
மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசிகள்
நிலம் ராசிகள்
ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவை நிலம் ராசிகள்
காற்று ராசிகள்
மிதுனம், துலாம், கும்பம் ஆகியவை காற்று ராசிகள்
நீர் ராசிகள்
கடகம் விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள்.
லக்கினங்களை சரம், ஸ்திரம், உபயம் என்று வகைப் படுத்தலாம்.
சர ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியன சர ராசிகள்.
ஸ்திர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள்.
உபய ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியன உபய ராசிகள்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu