நீங்கள் மகர லக்கினத்தில் பிறந்தவரா..? அப்ப இதுதான் உங்கள் குணம்..!
characters of capricorn in tamil-மகர லக்கினத்தில் பிறந்தவர்களின் குணாதிசயம் (கோப்பு படம்)
Characters of Capricorn in Tamil-சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்கினம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.
இதில் ஒவ்வொரு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் இன்று மகர லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள் மற்றும் குணாதிசயங்களைப் பார்ப்போம் வாங்க.
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் எப்படியான குணாதசியங்களை பெற்றிருப்பார்கள்?
மகர லக்னத்துக்கான அதிபதி சனி பகவன். மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். எல்லா விதமான கலைகளிலும் ஈடுபாடு கொண்டு அனைத்திலும் ஆர்வமுடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஒல்லிக்குச்சி உடம்பைத்தான் கொண்டிருப்பார்கள். ஆனால் மனதில் திடமும் நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். போதும் என்ற மனம் படைத்தவர்கள். பாடுபட்டு பணத்தை சேர்க்கக் கூடியவர்கள். சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு ஆரோக்ய குறைபாடு இருந்து கொண்டே இருக்கும். தனிமையை அதிகம் விரும்புவார்கள். தனக்கு சரியென்று பட்டதை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். பிடிவாதம் பிடித்தால் அதில் இருந்து விடுபடமாட்டார்கள். அந்த அளவுக்கு பிடிவாத குணம் கொண்டவர்கள். கொள்கை உடையவர்களான இவர்கள் எள்ளளவும் ஊக்கத்தை கைவிடாமல், தோற்றால் நம்பிக்கை இழக்காமலும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்துக் காட்டுவார்கள்.
உடன் பிறந்தோர்களிடம் பாசம் அதிகம் இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். இவர்கள் எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்தவாறு இருப்பார்கள். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். மனதில் தேவையில்லாத ஒன்றை போட்டு குழப்பிக் கொள்வார்கள்.
கல்வியறிவு குறைவாக இருந்தாலும் அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் இவர்கள் வாழ்க்கை செழிப்புமிக்கதாக இருக்கும். இவர்கள் எந்த வேலையையும் பொறுமையாகவே செய்வார்கள். ஆனால் சரியாக செய்வார்கள். ரகசியம் காப்பதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் மிகவும் முன் ஜாக்கிரதைக் காரர்களாக விளங்குவார்கள். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் கவனம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
எந்த இடர்பாடு வந்தாலும் அதற்காக அவர்கள் அஞ்சுவதில்லை. இவர்கள் அனுபவ அறிவாளி. இவர்கள் தங்கள் திட்டங்களை சாமர்த்தியமாக செயல்படுத்துவார்கள். இவர்கள் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்கள். அவர்களுக்கு துன்பத்தின்போது உதவியவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மகர லக்னத்தில் பிறந்தவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu