/* */

நீதிக்கட்சி முன்னோடி திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நினைவு நாள்

திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.வழக்குரைஞராக இருந்தார்.நீதிக்கட்சி சார்பில் சட்ட மன்ற மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.

HIGHLIGHTS

நீதிக்கட்சி முன்னோடி திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நினைவு நாள்
X

திவான் பகதூர் தணிகாசலம்

திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் காலமான நாளின்று

திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். வழக்குரைஞராக இருந்தார். பேச்சாற்றலும் வாதத் திறமையும் கொண்டவர். நீதிக்கட்சி சார்பில் சட்ட மன்ற மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.

1919 இல் சென்னை மாநகராட்சிக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925 இல் சென்னை மாநகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்தக் காலத்தில் நடந்த பிராமணரால்லாத மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டும் தலைமையேற்றும் செயல்பட்டார். நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயரோடு இணைந்து பணியாற்றினார்.

அரசுப் பணியிடங்களைச் சமூக விகிதாச்சாரப்படி நிரப்பிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் ஓ. தணிகாசலம் சென்னை சட்ட மன்ற மேலவையில் தீர்மானங்கள் கொண்டுவந்தார். அவைதான் பிற்காலத்தில் 1928 ஆம் ஆண்டில் எஸ் முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்பு வாரி ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

நீதித் துறையில் முனிசீப் நியமன அதிகாரத்தை அரசே ஏற்று செயல்படுத்தவேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னையில் தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெருவுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 July 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...