Vilangu Fish-விலாங்கு மீன் ஆண்மையை பெருக்குமாம்..!
vilangu fish-விலாங்கு மீன் (கோப்பு படம்)
Vilangu Fish
விலாங்கு மீன்
விலாங்கு மீன்கள் அதிகமாக ஆறு மற்றும் வயல்,குளம் ,கால்வாய்கள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன விலாங்கு மீன்கள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த மண்ணில் காணப்படும்.
நீருக்கடியில் கற்பாறைகளின் இடைவெளிகளில் வசிக்கும். இவை நீருக்கடியில் பொந்துகளில் அதிகம் காணப்படும்.
Vilangu Fish
விலாங்கு என்று பெயர் இருந்தாலும், இதை கத்திமீன் என்கிறார்கள். ஈல் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு மஞ்சள் கலந்த கருப்பு அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும். விலாங்கு மீன் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காகவும் தனக்கான உணவுகளை வேட்டையாடுவதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், கிட்டத்தட்ட 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்து காத்துக்கொள்கின்றது. அதனால் இதை மின்சார மீன் என்றும் சொல்வார்கள்.
பாறை சந்துகளில்
அதேபோல, இதன் தாடையில் கூர்மையான பற்கள் இருக்கும். இந்த பற்களை வைத்து இறைகளை தேடினாலும், எதிரிகளை தாக்கவும், இந்த பற்களை பயன்படுத்தும். நீளமான உடல் இருந்தாலும், அதை வளைத்து கொண்டு, குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருக்கும்.
உணவு தேடுவதற்கு பாறை இடுக்கினுள் இருந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்து கொண்டேயிருக்குமாம். வேறு உயிரினங்கள் வரும்போது வாயை மூடி உணவை கவ்விக்கொள்கிறது.
Vilangu Fish
தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும் பல மணி நேரம் இதனால் மண்ணிலும் இருக்க முடியும். நீருக்கடியில் கற்பாறைகளின் இடைவெளிகளிலும் நீருக்கடியிலேயே உள்ள பொந்துகளிலும் நிறைய காணப்படும். ஈரப்பதம் உள்ள மண்ணிலும்கூட விலாங்கு மீன் நிறைய இருக்கும்.
விலாங்கு மீனின் நன்மைகள்
விலாங்கு மீன் உண்பதால் ஆண்மையை அதிகரிக்க செய்யுமாம். இதில் உள்ள இரும்புச்சத்து வயிற்றிலுள்ள புண்களை குணமாக்கும் என்கிறார்கள். உடலுக்கு தேவையான இரும்புச்சத்தும் இந்த மீனில் உள்ளது. நல்ல கண் பார்வைக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.. முடி, நகங்கள், தோல் பராமரிப்புகளுக்கு உதவுகிறது.
Vilangu Fish
பாதரசம்
இதிலுள்ள மக்னீசியம் மலச்சிக்கலை நீக்குகிறது. மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் பொட்டாசியம் இதில் நிரம்பி உள்ளது. ஆனால், இந்த மீனில் பாலி குளோரினேடட் பைபினைல் + பாதரசம் என இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையை கொண்டது என்கிறார்கள்.
அதனால்தான் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் இந்த மீனை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இதனால், குழந்தைகளின் வளரும் நரம்பு மண்டலங்களில் பாதரசம் நுட்பமான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
Vilangu Fish
அதிகம் உண்பதை தவிர்க்கவேண்டும்
மொத்தத்தில், பாதரசம் கலந்த மீன்கள், மனச்சோர்வையும், பதற்ற தன்மையையுயும் ஏற்படுத்திவிடும். மாரடைப்பு, புற்றுநோய் அபாயமும் ஏற்படும். எனவே பாதரசம் அதிகமுள்ள இந்த ஷாக் அடிக்கும் மீன், உடலுக்கு கெடுதி என்கிறார்கள். அதாவது அதிகமாக உண்ணக்கூடாது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu