ரோகு மீன் சாப்பிடுங்க..! தைராய்டு வராது..! வாசம்..ஜொள்ளுதுங்க..!
![Rogue Fish in Tamil Rogue Fish in Tamil](https://www.nativenews.in/h-upload/2022/09/01/1585182-rohu-fish-250x250.webp)
Rogue Fish in Tamil
Rogue Fish in Tamil
மீன் வகை எவ்வளவோ உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதம். ராசியிலும் தனிவிதம். சிலவை நல்ல மருத்துவ குணம் கொண்டவைகளாக இருக்கும். அந்த வரிசையில் ரோகு மீன் முக்கியமானதுங்க.
![](https://www.instanews.city/h-upload/2022/09/01/1585180-rohu-fish-1.webp)
கண்ணாடிக் கெண்டை :
அது என்னங்க ரோகு மீன். தமிழில் அதுக்குப்பெயர் கண்ணாடிக் கெண்டை மீன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவு வகைகளில் மீனை சாப்பிடுவதால் எந்த வயிற்று தொல்லைகளும் வராத ஒரு அசைவ உணவு என்றால், அது மீன்தான். மீன்களில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
மற்ற இறைச்சி வகைகளைக் காட்டிலும் மீன்களில் அதிக அளவு இயற்கையாக பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஒமேகா-3 ஊட்டச்சத்து மீன்களில் அதிகமாக உள்ளது.
மீன் வகைகள்
கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், ஆற்று மீன்கள், குளம், ஏரி, பண்ணை மீன்கள் என பல்வேறு வகைகளில் மீன்கள் நமக்கு கிடைக்கின்றன. நாம பார்க்கும் இந்த ரோகு மீனில் ஏராளமான புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிக அளவில் உள்ளன.
மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான அயோடின், செலினியம், துத்தநாகம், கால்சியம், போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த மீனில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் சாப்பிடலாம்.
![](https://www.instanews.city/h-upload/2022/09/01/1585179-rohu-fish-fry-recipe-main-photo.webp)
இதயத்துக்கு நல்லது
இந்த ரோகு மீன் சாப்பிடுவதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏதும் வராமல் தடுக்கும். இது ஒரு ஆற்றுமீன் என்பதால் கொழுப்பு குறைவாகவும் ஒமேகா-3 சத்து அதிகமாகவும் நிறைந்திருக்கும். இந்த ரோகு மீன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்துவது மட்டுமில்லாமல் நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. கடல் உணவில் உள்ள DHA/ECA ஒமேகா-3 போன்ற ஊட்டச்சத்துகள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை வெளியேற்றும்.
தைராய்டு வராது
இந்த ரோகு மீனை வாரத்தில் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வை மேம்படும்.
உடலில் தைராய்டு சுரப்பிக்கு அயோடின் சத்து மிகவும் முக்கியமானது. எனவே, அயோடின் நிறைந்த இந்த ரோகு மீனை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவதன் மூலமாக உடலில் தைராய்டு சுரப்பி சீராக சுரக்க இது பெரிதும் உதவும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu