ஆன்லைன் காதலில் விழுந்த இளைஞர் – வழிப்பறி மோசடி

ஆன்லைன் காதலில் விழுந்த இளைஞர் – வழிப்பறி மோசடி
திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மோசடி வழக்கில், பெண் போல நடித்து இளைஞரை ஏமாற்றி வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் டேட்டிங் செயலியான Grindr-ஐ பயன்படுத்தி குற்றவாளிகள் இளைஞரிடம் பெண் போல பேசிச் சலிப்பு உண்டாக்கியுள்ளனர். தொடர்ந்து நெருக்கமாக பழகிய அந்த "பெண்", தனிமையில் சந்திக்கலாம் என்று கூறியதனை நம்பிய இளைஞர், குறித்த இடத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு காத்திருந்தது காதலல்ல, வழிப்பறி கும்பலின் சதி. அந்த இடத்தில் முன்கூட்டியே பைக்கில் வந்திருந்த மூவர் கொண்ட குழு, இளைஞரை மிரட்டி, அவரிடம் இருந்த பைக், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டதும், விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இளம் வயதினர் மிகுந்த அவதானத்துடன் செயலிகளைக் பயன்படுத்த வேண்டும் எனவும், சமூகத்திலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu