mountain dew jilebi-ஜிலேபில பச்சை நிற ஜிலேபி பார்த்திருக்கீங்களா..? எங்க? எப்படின்னு தெரிஞ்சுக்கங்க.!
பச்சை ஜிலேபி (கோப்பு படம்)
'Mountain Dew' jalebis in tamil, jilebi news, karnataka avarebele jilebi news, Green jilebi, mountain dew jilebi
பச்சை நிற 'மவுண்டன் டியூ' ஜிலேபி படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜிலேபி பெங்களூரில் தயாரிக்கப்படுகின்றன. பார்க்கவே நாவில் ஊறுகிறது. பார்ப்பதற்கும் ஒரு தனி அழகில் இளம் பெண் போல மினுக்காகவே இருக்கிறது.
பொதுவாகவே ஜிலேபியைப் பற்றி நினைக்கும்போது, நமக்கு சிந்தனையில் முதலில் வருவது என்ன நிறம்? இந்தியா முழுவதுமே ஜிலேபி என்றால் அதற்கென ஸ்பெஷலாக தீர்மானிக்கப்பட்ட ஆரஞ்சு கலந்த ஒரு பழுப்பு நிறம்தான். அதன் இனிமையான பிசுபிசுப்புடன் வாயில் போட்டால் கரைந்து போகும். நாமும் அதன் சுவையில் திளைத்துப்போவோம்.
பெரும்பாலானவர்கள் ஆரஞ்சு நிறத்தை நினைக்கும்போது ஜிலேபி பச்சை நிறத்தில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நாம் எப்போதாவது கற்பனை செய்திருப்போமா ?
ஆனால் பாருங்க, பச்சை நிற 'மவுண்டன் டியூ' ஜிலேபி எவ்ளோ அழகா இருக்குன்னு. பார்க்கும்போதே சுவைக்கத்தோன்றுகிறது. படத்தை பாருங்களேன்.
அது நாம் நினைக்கும் நிறத்தில் இல்லை. பச்சை..பச்சை..பச்சை ஜிலேபி..!
'மலைப் பனி' (mountain dew ) ஜிலேபி என்றால் என்ன?
இன்ஸ்டாகிராம் உணவுப் பதிவர் அமர் சிரோஹி என்பவர் அந்த பச்சை ஜிலேபி படத்தைப்பார்த்து அவற்றை மலைப் பனி ஜலேபி என்று அழைத்தார். அந்த பதிவில் "மவுண்டன் டியூ" , "மலைப் பனி" என்கிறார். அவைகள் வண்ணங்கள் சேர்ப்பதால் பச்சை ஆவதில்லை.அந்த ஜிலேபியின் நிறமே பச்சைதான். இந்த பச்சை ஜிலேபி பெங்களூரில் மிகவும் பிரபலமான அவரெபெல்லே ஜிலேபி (AVAREBELE JILEBI) ஆகும். இவை ஹைசின்த் பீன்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
அதனால்தான் அதன் நிறம் பச்சையாக இருக்கிறது, இப்போ தெரியுதாங்க. கர்நாடகாவில் அவரெபெல்லே என உள்ளூர் மக்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஜிலேபி ஆகும்.'அவரேபிலேயின்' தனித்துவமான சுவை மிகவும் பிரபலமானது. இந்த ஜிலேபியின் சிறப்பை கொண்டாட ஒரு 'அவரேகை மேளா' என ஒரு திருவிழாவே உள்ளது என்றால் அதன் சிறப்பை பாருங்கள். அவரெபெல்லே ஜிலேபி வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றின் சுவை வழக்கமான ஜிலேபியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதையும் நாம் அறிந்தே ஆகவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu