இரத்தத்தை சுத்தமாக்க சிறுநீரகத்திற்கு தேவையான உணவு
நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவைகளில் ஒன்று இரத்தம் சுத்தமாக இருப்பது ஆகும். நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை செய்வது சிறுநீரகம் ஆகும். உடலில் சேரும் யூரியா, அதிகப்படியான நீர் மற்றும் பிற கழிவுப் பொருட்களை நமது இரத்தத்தில் இருந்து சிறுநீரகங்கள் வடிகட்டுகின்றன.
அந்தக் கழிவுகள், சிறுநீராக உற்பத்தி செய்கின்றன. இரத்தம் சுத்தீகரிப்படும் போது வெளியாகும் கழிவுகள் அனைத்தும் சிறுநீர் கழிக்கும் போது வெளியேற்றப்படுகின்றன. தண்ணீர் என்பது, நமதுள் தாகத்தைத் தணிக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. இது எளிமையான இயற்கையான இரத்த சுத்திகரிப்புக்களில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயற்கையான இரத்த சுத்திகரிப்பானைத் தவிர, சில காய்கறிகள் மற்றும் பழங்கள் இரத்தத்தில் சேரும் அழுக்குகளை வெளியேற்றும் வேலையை செய்கின்றன.
ஆக்ஸிஜன், ஹார்மோன்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கும் வேலையை நமது இரத்தம் செய்கிறது. நமது உடல் சிறப்பாக செயல்பட இரத்தம் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். இருந்தபோதிலும், மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக, உடலில் நச்சுகள் குவிந்து, இரத்தத்தை மாசுபடுத்துகிறது.
இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் அவ்வப்போது வெளியேற்றப்படா விட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையத் தொடங்குகிறது, இதன் காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இரத்தம் அழுக்காக இருந்தால், சரும பிரச்சனைகள், கெட்ட கொழுப்பு, அதிக யூரிக் அமிலம் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல விஷயங்கள் உடலை பாதிக்கும்.
எனவே, தண்ணீரைத் தவிர, நமது உடலிலுள்ள இரத்தத்தை சுத்தீகரிக்க சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி சொல்ல போகிறோம்.
இரத்த சுத்தீகரிப்புக்கு பழங்கள் ஆப்பிள், பேரிக்காய், பிளம், பெர்ரி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இரத்தத்தை இயற்கையாக சுத்திகரிக்க உதவுகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக இருப்பதால், இந்த பழங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகள் மற்றும் அழுக்குகள் நீக்கி உடலாரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வெல்லம் இயற்கையான இரத்த சுத்திகரிப்புக்கு வெல்லம் சிறந்தது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் வெல்லம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
பச்சை இலை காய்கறிகள் கீரை, கோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்கும். பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட பச்சை இலை காய்கறிகளில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பீட்ரூட்டை உட்கொள்வது இரத்த விருத்திக்கு நல்லது என்பதுடன், இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. உடலில் படியும் நச்சுக்களை நீக்கும் பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்.
அத்தோடு, எலுமிச்சை, மஞ்சள், கேரட், பூண்டு, கொத்துமல்லி தழை என நமக்கு சுலபமாக கிடைக்கும் உணவுப் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் உள்ள இரத்தைதையும் சுத்தீகரிக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu