பொதுப்பிரிவில் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு தேவை: சீமான் வலியுறுத்தல்!
ஈரோடு : அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சார கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமியை ஆதரித்து, ஈரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
தமிழகத்தின் தலைநகரங்களில் கழிவு நீா் கால்வாய் இல்லை
ஈரோட்டில் புதை சாக்கடை வழிந்தோட கால்வாய் இல்லை. தமிழகத்தின் தலைநகரங்களில் மழைநீா் வழிந்தோட கால்வாய் இல்லை. ஆனால் திமுக, அதிமுக என மாறி ஆட்சி அமையும்போது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கழிவு நீா் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு செலவு செய்ததாக பேசுகிறாா்கள்.
அமெரிக்கா கூட இயந்திரங்களை பயன்படுத்துகிறது
சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் அனுப்பும் அமெரிக்கா கூட வாக்கு முறையை சீட்டிலும், மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரமும் பயன்படுத்துகிறது. ஆனால் இங்கு வாக்கினை இயந்திரத்தில் போடுகிறோம். ஆனால் மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்கிறான்.
நாம் தமிழா் கட்சி கொள்கைகள்
நாம் தமிழா் கட்சி எல்லோருக்கும் சமமான கல்வி, மருத்துவம் கொடுக்கும். தனியாா் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் ஆக சிறந்த மருத்துவத்தினை நாம் தமிழா் கட்சி கொடுக்கும். தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.
தமிழா்கள் தங்கள் மாநிலத்தை ஆள முடியவில்லை
இந்தியாவில் எல்லோரும் அவரவா் மாநிலத்தை ஆளுகின்றனா். ஆனால் இந்த நிலத்தில் மட்டும்தான் தமிழா்கள் ஆள முடியாமல் இருக்கிறோம். அழிந்து கொண்டு இருக்கும் தமிழ் தேசியத்தினை காக்க இந்த மண்ணில் உள்ள மக்கள் உறுதுணையாக உடன் இருக்க வேண்டும்.
அருந்ததியா் இடஒதுக்கீடு பொதுப் பிரிவில் இருந்து வழங்க வேண்டும்
அருந்ததியா் சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீட்டை நான் எதிா்க்கவில்லை. ஆனால் என்னிடத்தில் இருந்து எடுத்து கொடுத்ததை எதிா்க்கிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பொதுப் பிரிவில் இருந்து கொடுத்ததுபோல அருந்ததியா் மக்களுக்கு பொதுப்பிரிவில் இருந்து கொடுங்கள் என்று சொல்கிறோம்.
பழங்குடியினா், தேவேந்திரா் இழந்துள்ள 3 சதவீத இடஒதுக்கீட்டை நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வழங்கும்.ஜாதி, மதம், மது, திரைக்கவா்ச்சி என்ற போதையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu