Childrens day kavithai in tamil-குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..!
Childrens day kavithai in tamil
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். அதனால் அவருக்கு “நேரு மாமா” என்ற பட்டம் கிடைத்தது.
நேரு பிறந்த நாள் – நவம்பர் 14, தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும், குழந்தைகள் மீதான அன்பிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Childrens day kavithai in tamil
குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லணுமா? அப்ப இதை படிங்க.
சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே, உலகில் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.
உலக வரலாற்றை படிப்பதை விட, உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலைகளைக் கூட அசைத்து விடும்.
துணிந்து செயல்படுகிறவர்கள் தான்,அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.
Childrens day kavithai in tamil
அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பூக்கள். அனைவரும் சேர்ந்து, இந்த உலகத்தை அழகான தோட்டமாக மாற்றுங்கள்.
வண்ண வண்ண உடைகள் அணியும் வண்ணத்துப்பூச்சிகள், மழலைப் பேச்சில் கொஞ்சம் கிளிகள், கற்பனைக்கு எட்டா அதிசயங்கள், குழந்தைகள். குழந்தைகள் தின வாழ்த்துகள்.
சிறகை விரித்துப் பறக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் துள்ளிக் குதிக்கும் மான்குட்டிகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
Childrens day kavithai in tamil
ஆயிரம் கவலைகள் மனதில் இருந்தாலும், அதை மறக்க வைக்கும் ஒரே மருந்து குழந்தையின் சிரிப்பு மட்டுமே.
மழை நீரை போல தூய்மையானது மழலையின் சிரிப்பு. மழலைகளைப் போற்றுவோம்
ஒரு குழந்தையைப் போல வாழ்வது, வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியாகும்.
எத்தனை பெரியவர்கள் இருந்தாலும் கொடுக்க முடியாத மகிழ்வையும், கலகலப்பையும். தன் சேட்டை, குறும்பு, அப்பாவித்தனம் வழியாக கொடுத்து விடும் ஒரு சிறு குழந்தை.
Childrens day kavithai in tamil
பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து, சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைக்கும், அன்பு குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும். நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின்
சிரிப்பின் முன்னால். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
ஒரு புன்னகை பூமியில் சொர்க்கம் காட்ட முடியும் என்றால், அது நீங்கள் மட்டுமே. ஒரு பார்வை அனைத்தையும் மாற்றி சொர்க்கத்தை கொண்டு வர முடியும் என்றால், அது உங்களால் மட்டுமே. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
Childrens day kavithai in tamil
பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டாய், அழுகையையும் நிறுத்தி விட்டாய். ஆனால், இன்னும் ஏன் மனம் வரவில்லை, பொம்மைகளை விட்டு விட்டு, புத்தகத்தை கையில் எடுக்க? ஏனெனில் இன்னும் நீ சிறுபிள்ளை. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
ஆயிரம் கவலைகள் இருந்தாலும், ஒரே நொடியில் அவற்றை மறக்க வைத்து அனைவரையும் சுலபமாக சிரிக்க வைக்க முடியும் என்றால், அது குழந்தைகளால் மட்டுமே சத்தியம். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
உலகில் எத்தனை வண்ணங்கள் இருந்தாலும் அத்தனையும் தோற்றுயஹ் தான் போகின்றன, உந்தன் கரங்கள் முன்.இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
Childrens day kavithai in tamil
குழந்தைகள் செய்யும் குறும்புகள் சுகமே. கரும்பு மொழி மழலை சுகமே. திரும்பும் திசை எங்கும் உன் முகச் சிரிப்பு என் அகம் சேர்கிறது. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
என்னைப் பிடிக்க முடியாது என்று சிரித்துகொண்டே என் பின்னே கலகல மணிபோல சிரிப்பை சிதறவிட்டு ஓடிவரும் குழந்தையின் அழகு ஓர் அபூர்வம். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
குழந்தைகள் எல்லாமே அவதாரங்கள் தான். அவர்கள் போக்கில் நெறியோடு வளரும்போது அவர்கள் மேன்மைப் பெறுகின்றார்கள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
Childrens day kavithai in tamil
பொய்யாகச் சிரித்து ஏமாற்றத் தெரியாது. பொய்யும் உன்னிடம் தோற்றுப்போகும். அதனால்தான் உன்னை தெய்வத்துக்கு இணையாக கூறினார்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
சின்னச் சின்ன சிட்டு. நீ சிங்காரச் சிட்டு. சில்லறை சிதறிய சிரிப்பின் அழகில் வானவில்லின் அழகு. கள்ளமில்லா உனது வாழ்க்கை எனக்கும் வேண்டும் தினமே. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
வண்ணம் கலையாத வண்ணத்துப் பூச்சிகள். வாட்டம் காணாத மலர்ந்த முகத்து முல்லைகள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
நீ தீங்குகளற்ற சேற்று நிலம். உன்னில் நல்ல விதைகள் விதைப்போம். நீ தேசம் காக்கும் விருட்சமாக வளரவேண்டும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
Childrens day kavithai in tamil
குழந்தைகள் ஒரு தோட்டத்தில் மலர்ந்த மொட்டுகள் போன்றவர். பேதைமை அவர்களுக்குள் இல்லை. பிரிவினை என்பதும் அறியார். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
தேசத்தின் எதிர்காலம் , நாளைய நற் குடிமக்கள். அன்பின் வடிவங்கள். கள்ளமில்லா உள்ளங்கள் கொண்டவர்கள். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இதை நாடு இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி. இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu