/* */

இந்தியாவில் பருத்தி சீசன் தொடக்கம்: விலையும் கிடுகிடுவென சரிவு

Cotton Price Per Kg -நாட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்களுக்கு விடுமுறை விடப்படும் நிலை உள்ளதால், பருத்தி விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

இந்தியாவில் பருத்தி சீசன் தொடக்கம்: விலையும் கிடுகிடுவென சரிவு
X

பைல் படம்.

Cotton Price Per KG -உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பருத்தி விளைச்சல் வீழ்ச்சி காரணமாக பருத்தி விலை ஒரு கண்டி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயினை எட்டியது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கி ஸ்பின்னிங் மில்கள் நடத்த முடியாமல் தடுமாறின.

இந்நிலையில், உலக ஜவுளி மார்க்கெட்டிலும் பெரும் மந்தநிலை உருவானது. இதனால் இந்தியாவில் நுால்களும், ஜவுளிகளும் பல லட்சம் கோடிரூபாய் அளவுக்கு தேக்கமடைந்தது. இதனால் பல மில்கள் உற்பத்தியை குறைத்தன. உள்நாட்டில் பருத்தி தேவையும் குறைந்துள்ளது.

இந்த சூழலில் இந்தியாவில் பருத்தி சீசன் தொடங்கி உள்ளது. வரும் டிசம்பரில் மும்முரத்தை எட்டும். 2023ம் ஆண்டு மார்ச் வரை நீடிக்கும். இந்த ஆண்டு 3 கோடியே 40 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உள்நாட்டு தேவை 2 கோடி பேல்களாக குறைந்து விட்டது. எனவே பருத்தி விலை சரிய தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் நாட்டில் ஒரு கண்டி பஞ்சு (355 கிலோ) 73 ஆயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது. இதன் விலை இன்னும் சரிந்து 60 ஆயிரம் ரூபாயினை எட்டும் வாய்ப்பு உள்ளது என பருத்தி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 4:48 AM GMT

Related News