முதுமலையில் பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திக்கும் பாரத பிரதமர் மோடி; பாதுகாப்பு தீவிரம்
Coimbatore News, Coimbatore News Today- தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து, பிரதமர் மோடி சந்திக்க இருப்பதால், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
Coimbatore News, Coimbatore News Today- நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகிற 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
பின்னர் பாகன்களிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப் படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார். மேலும், அந்த படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி குட்டி யானைகளை பார்வையிடுகிறார்.
பின்னர் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிகிறார்.
இதையடுத்து அங்கிருந்து மசினகுடி இறங்கு தரைத்தளத்தில் தயார் நிலையில் வைக்கப்படும் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு செல்ல உள்ளார். பிரதமர் வருகையையொட்டி முதுமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி 9-ம் தேதி தெப்பக்காடு வருகிறார். இதன் காரணமாக பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்ததற்காக, பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து, வாழ்த்துகள் தெரிவிப்பது, அந்த தம்பதியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu