தினம் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டா உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன?

பப்பாளி பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. இது இதய நோய், நீரிழிவு நோய், செரிமான பிரச்சினைகளுக்கு உதவுதல், இரத்த அழுத்தத்தைக குறைத்தல், வீக்கங்களை குறைத்தல் என பல வகைகளில் உதவுகிறது. அவற்றின் நன்மைகள் பற்றி பின்வருமாறு காண்போம்.

பப்பாளி என்பது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான பழமாகும். இது நமக்கு பல்வேறு சத்துக்களை வழங்குவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.பப்பாளிப் பழம் வெப்பமண்டல பகுதிகளில் வளரும் ஒரு வகை பழமாகும். இதில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளன .இந்த சதைப்பற்றுள்ள பழத்தை நாம் பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து இளமையாக வைத்துக் கொள்கிறது .

இந்த பப்பாளி பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. இது இதய நோய், நீரிழிவு நோய், செரிமான பிரச்சினைகளுக்கு உதவுதல், இரத்த அழுத்தத்தைக குறைத்தல், வீக்கங்களை குறைத்தல் என பல வகைகளில் உதவுகிறது . இந்த பப்பாளி பழம் நமக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் உள்ளனர். அவற்றின் நன்மைகள் பற்றி பின்வருமாறு காண்போம்.


​பப்பாளிப் பழத்தின் சுவை மற்றும் சத்துகள்

பப்பாளி பழத்தில் பாப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது உணவுப் பொருட்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது . ஒரு சிறிய பப்பாளி பழத்தில் 59 கிராம் கலோரிகள் உள்ளன . மேலும் கார்போஹைட்ரேட்டுகள் , நார்ச்சத்துக்கள் , புரதம், விட்டமின் சி, விட்டமின் ஏ, போலேட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் காணப்படுகிறது.

ஆக்ஸினேற்றியாக செயல்படும் பப்பாளிப் பழம்

பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள் ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதால் செல்கள் அழிவதை தடுக்கிறது . புளித்த பப்பாளி பழத்தை வயதானவர்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு தாக்கம் மற்றும் கல்லீரல் நோய் போன்ற நோய்களிலிருந்து இது தடுக்கிறது . இந்த பழம் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு

பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவை அதிகம் உள்ளதால் இதய நோயை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது . இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.

சரும ஆரோகியத்தை பாதுகாக்கும் பப்பாளி

1. பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் E போன்றவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

2. பப்பாளி கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவுவதால், முகப்பருக்கள் குறைய சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படுகிறது.

3. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து இளமையாக வைக்கிறது .

​பப்பாளிப் பழம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டது

பப்பாளி பழத்தில் உள்ள லைக்கோபீன் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது . இது மார்பக புற்று நோயை எதிர்த்து போராடுகிறது . எனவே புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் பப்பாளி சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அழற்சியை எதிர்க்கும் பப்பாளிப்பழம்

பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற என்சைம் புரதத்தை எளிதில் ஜீரணிக்கச் செய்கிறது .பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் நாள்பட்ட அழற்சியை போக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் போன்ற நோய்களை போக்க உதவுகிறது.

பப்பாளி என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகப்பெரிய தன்மைகளைக் கொண்டுள்ளது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் நம்முடைய ஆரோக்கியம் பாதுகாப்பாகவும் ,உடல் சீராகவும் இருக்கும்.

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!