பலருக்கும் தெரியாத வாழைக்காயில் இருக்கும் நன்மைகள் !!!

பலருக்கும் தெரியாத வாழைக்காயில் இருக்கும் நன்மைகள் !!!
X
வாழைக்காயில் உள்ள காபோஹைட்ரேட்டுகள், பாஸ்டின் போன்ற உடலில் சக்தி தரும் பொருட்களால் உடல் திறன் அதிகரிக்க உதவுகின்றது. இது உடல் இயக்கம் மற்றும் உயிரணு வளர்ச்சிக்கு முக்கியமானது.இதில் அதிக நார்சத்து உள்ளது இதன் மூலம் நமக்கு பெரிய அளவில் நன்மைகள் உள்ளது ,அது நம் உடலுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் .

வாழைக்காயில் (Raw Banana) பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும், பல நன்மைகள் உள்ளது குறிப்பாக, இது சில உடல் நிலைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க முடியும். வாழைப்பழம் நம் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை தரக் கூடியது. இந்த பயன் உள்ள வாழைக்காயின் நன்மைகள் மற்றும் அது எந்தெந்த நோய்களை குணபடுத்தும் என்று நாம் காண்போம்.

சர்க்கரை நோய் (Diabetes)

வாழைக்காயின் உள்ள நல்ல நார்ச்சத்து ,ஸ்டார்ச் (Resistant Starch) அளவு, சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இது இன்சுலின் செயற்பாட்டை சீராக்கி, சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.இதனால் சக்கரைநோய்க்குக்கு பெரிதும் உதவும் ஒரு அருமருந்தாக உள்ளது .

உடல் எடையை சீராக்க

வாழைக்காய், அதிக கொலஸ்ட்ரால் (bad cholesterol) குறைக்க உதவும். மேலும் ,நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையினை சீராக வைக்க உதவுகிறது.

செரிமானதன்மையை அதிகரிக்க

வாழைக்காயில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்தும் நிறைந்து உள்ளது. வயிற்றுக்கு மிகவும் நன்மைபயக்க கூடிய இந்த வாழைக்காயினை அடிக்கடி உணவாக சேர்த்துக் கொள்வதினால் வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. பல பிரச்சனைகளை குணமாக்குவதற்கு சிறந்த ஒன்றாக இந்த வாழைக்காய் விளங்குகிறது .வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து மலம் மெல்லிசாக வெளியேற உதவுகிறது, இதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

இதய பாதுகாப்பு

வாழைக்காயில் உள்ள பி6 (Vitamin B6) நமது மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் .வாழைக்காய் ஒரு சிறந்த பொட்டாசியம் சத்து வழங்கும் உணவு. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வாழைக்காயில் உள்ள இரும்பு சத்து, இரும்பு சத்து பற்றாக்குறையை தடுக்கும். இது இரத்த பரிமாற்றத்தை சீராக்குவதற்கும், ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.வைட்டமின் சி ,ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகிய இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்க்கு எதிராக போராட உதவும் .

கண் பிரச்னை குணமாக

நமது உடலில் மிக முக்கிய உறுப்பான கண் மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் அந்த வகையில் கண் பிரச்சனைகளை குணப்படுத்த சிறந்த உணவு பொருளாக இந்த வாழைக்காய் உள்ளது .

வாழைக்காயில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்டின் போன்ற உடலில் சக்தி தரும் பொருட்களால் உடல் திறன் அதிகரிக்க உதவுகின்றது. இது உடல் இயக்கம் மற்றும் உயிரணு வளர்ச்சிக்கு முக்கியமானது.வாழைக்காயில் உள்ள மக்னீசியம் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது நரம்பு மற்றும் தசை சுருக்கங்களின் நிலையை சீராக்க உதவுகின்றது.

Tags

Next Story