நோயாளியைப் பாக்கப் போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க...!

நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!
X
மருத்துவமனைக்குள் நுழையும் முன்பும், வெளியேறும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் வழங்கப்படும் கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும். முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என பல விதிகளை பார்ப்போம்.

நோயாளியை பார்க்க செல்வது என்பது அவரின் நலனை விசாரிக்க தான் செல்கிறோம் .நாம் செல்லவில்லை என்றால் அவர்கள் நம்மை தப்பாக கருதுவார்கள் என்று சிலர் உடனடியாக அவரை காண குழந்தைகளையும் அழைத்து செல்கிறோம்.ஆனால் அவ்வாறு செல்வது தப்பில்லை அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றது, அதனை பின்பற்றி சென்றால் நமது உடளிலும் அந்த நோய் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.அந்த கட்டளைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நோயாளியை காண வீட்டுக்கோ ,மருத்துவமனைக்கோ சென்றால் நாம் என்னென்ன வழியை பின்பற்றுவோம் ? வாங்க பார்க்கலாம்.

1. நோய்த்தொற்று தடுப்பு முறைகள்:

  • மருத்துவமனைக்குள் நுழையும் முன்பும், வெளியேறும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் வழங்கப்படும் கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தவும். முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். நோயாளியின் அறைக்குள் நுழையும் முன் மருத்துவமனை ஊழியர்களின் அனுமதியைப் பெறவும்.

2. பார்வை நேரம் மற்றும் எண்ணிக்கை கட்டுப்பாடுகள்:

  • பெரும்பாலான மருத்துவமனைகளில் பார்வை நேரம் காலை 9 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 7 மணி வரையும் இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பார்வை நேரத்தை குறுகிய காலமாக வைத்திருக்கவும்.

3. மருத்துவமனை அறைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:

  • நோயாளியின் அறையில் அமைதியாக இருக்க வேண்டும் சத்தமாக பேசுவதைத் தவிர்க்கவும். நோயாளியின் படுக்கையில் அமர்வதைத் தவிர்க்கவும். மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் வரும்போது அறையை விட்டு வெளியேறவும்.

4. நோயாளிகளுக்கான உணவு மற்றும் பொருட்கள் கொண்டு வருதல்:

  • வெளி உணவு கொண்டு வருவது பெரும்பாலான மருத்துவமனைகளில் தடை செய்யப்பட்டுள்ளது. நோயாளிக்கு ஏதேனும் கொண்டு வர வேண்டுமெனில், முதலில் மருத்துவர் அல்லது செவிலியரின் அனுமதியைப் பெறவும். வீட்டில் இருந்து அல்லது கடை களில் இருந்தோ கொண்டு வரும் உணவுகள் மருத்துவர் அனுமதியின்றி சாப்பிட்டால் மீண்டும் உடல்நலம் பாதிக்கக்கூடும்.

5. உற்சாகமூட்டுங்கள் :


  • உடல்நலம் பாதிக்கப்பட்டவர் முன் ஜோக் அடிப்பது, அவர்களைப் பார்க்க வைத்தபடித் தின்பண்டங்களைச் சாப்பிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டோரிடம் சோகச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும். அரசியல் பேசுவது, எங்கோ நடந்த பேரிழப்புகள் பற்றிப் பேசுவதையும் தவிர்க்கலாம். தன்னம்பிக்கை தரும்விதமாகப் பேச வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்போம் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். விரைவில் குணமாகிவிடும் என்று உற்சாகம் தரவேண்டும். அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும்.

6. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தொடர்பு கொள்ளுதல்:

  • மருத்துவர்கள் அல்லது செவிலியர்களிடம் நோயாளியின் உடல்நிலை குறித்து கேட்க வேண்டுமெனில், அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கேட்கவும். அவர்களின் பணியில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.

7. குழந்தைகள் மற்றும் முதியோர் பார்வையாளர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்கள்:

  • பொதுவாக 10-12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முதியோர்கள் பார்வைக்கு வரும்போது, அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கவும்.கட்டாயம் வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

8. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பார்வையிடுதல்:

  • தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பார்வையிட சிறப்பு அனுமதி தேவைப்படும். இத்தகைய சூழ்நிலைகளில் மருத்துவமனை வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

9. சுத்தமாக இருக்க வேண்டும் :

  • நோயாளியை காண செல்லும்போதுசுத்தமான உடையை அணிய வேண்டும்.நம்மிடம் உள்ள போர்வை போன்ற துணிகளை கொண்டு செல்ல கூடாது.ஏன்னென்றால் இதனால் கிருமிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இது நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது