இந்திய கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்:மும்பையில் ஸ்டாலின் பேச்சு
மும்பையில் நடந்த எம்.பி. ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்)
CM Stalin Mumbai Speech
இந்தியாவில் 7 கட்டங்களாக நடக்க உள்ள 18 வது லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணியானது அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என மும்பையில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார்.
மேலும் அவர் தெரிவிக்கும்போது, தேர்தல் பத்திரங்களின் வாயிலாக இந்தியாவை ஆளக்கூடிய பாஜ ஆட்சியின் ஒயிட் காலர் ஊழலானது அம்பலமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை அதாவது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையானது நேற்று மகாராஷ்டிரா மாநிலமான மும்பையில் நிறைவடைந்தது. இதனால் மும்பையின் சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
CM Stalin Mumbai Speech
எம்.பி. ராகுல் காந்திக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமான வழியாக முதல்வர் ஸ்டாலின் மும்பை சென்று அங்கு கலந்துகொண்டார். கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பேசினர். முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,
கடந்த 10 ஆண்டுகளில் தற்போதைய பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மற்றும் போலி பிரசாரம் ஆகிய இரு பணிகளை மட்டுமே செய்து வந்துள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற செயல்களுக்கு நாம் முற்றுப்புள்ளியானது வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மும்பையில் நடந்த பாரத ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் ஆங்கிலத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)
நம்முடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திய கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்ற பெயர் வைத்த பிறகு பாஜவினர் இந்தியா என்று சொல்வதையே தவிர்த்து வருவதைப் பார்க்கும்போது அவர்களுக்குள் பயம் ஏற்பட்டுவிட்டது என எண்ணத்தோன்றுகிறது.எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஊழல்வாதிகள் என பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார். ஆனால் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜ அரசின் ஒயிட் காலர் ஊழல் அம்பலமாகியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியை நாம் வீழ்த்த வேண்டும். மத்தியில் மதச்சார்பற்ற கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசை இந்தியா கூட்டணி அமைக்கும் என அவர் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் எம்.பி. ராகுல் காந்தி பேசும்போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் எனது தாயார் சோனியா முன்பாக கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்டேன். இந்த அதிகாரம் படைத்தவர்களை எதிர்த்து அவரால் சண்டை போட முடியாததை நினைத்து அவர் வெட்கப்படுவதாக கூறினார்.சிறையில் அடைத்துவிடுவர் என கதறினார். எலக்ட்ரானிக் ஓட்டு மெஷின், அமலாக்கத்துறை , சிபிஐ ரெய்டு, வருமானவரித்துறை இல்லாமல் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எனவே தான் வாக்காளர் ஒப்புகை சீட்டு மெஷினில் பதிவாகும்ஓட்டு சீட்டுக்களையும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகிறோம் என்றும் ஆனால் எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் பேசினார்.
இந்திய கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கரம் கோர்த்தனர் (இடம் :மும்பை நிகழ்ச்சி )
மேலும் இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் பலர் கலந்துகொண்டனர். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவிக்கும்போது, இந்தியா கூட்டணி கட்சியினருக்கு எதிராக அமலாக்கத்துறையும், சிபிஐயும் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
கருத்துக்கணிப்புகள் அனைத்துமே மோடி 3வது முறையாக வெற்றி பெறுவார் என்று சொல்லும் நிலையில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நிச்சயமாக இந்தியா கூட்டணிதான் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என சொல்லியுள்ளது ஆச்சயர்யத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் கையில்தாங்க உள்ளது.... பொறுத்திருந்து தான் பார்ப்போமே....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu