பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு. ரேண்டம் எண் வெளியீடு
TNEA Number Meaning in Tamil-தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி இ, பிடெக், பி ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. என்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஜுன் 4 ஆம் தேதியுடன் நிறைவடந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர் இந்த மாணவர்களுக்கான தரவரிசயை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது ரேண்டம் என் மூலம் முடிவு செய்யப்படும்.
தரவரிசை பட்டியல் ஜூன் 26ம் தேதி வெளியிடப்படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது தொடர்பான புகார்களை ஜூன் 26 முதல் 30ம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவாரணம் பெற முடியும். இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
ஜூலை 2 முதல் 5 தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 தொடங்கி ஆகஸ்டு 24 வரை நடக்கிறது.
மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu