Garlic in Tamil-பூண்டு மனிதர் வாழும் ஆண்டை கூட்டுமாம்..!
பூண்டு (கோப்பு படம்)
Garlic in Tamil
கிட்டத்தட்ட எல்லா சமையலறையிலும் இருக்கும் பூண்டு உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அதே போல் பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.வைட்டமின் பி-6, வைட்டமின்-சி, நார்ச்சத்து, புரதம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஒரு பல்பில் சுமார் 10-20 கிராம்புகள் இருக்கும். வெதுவெதுப்பான நீரில் 1 பல் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
Garlic in Tamil
1. பூண்டின் மருத்துவ குணங்கள்
பூண்டு என்பது வெங்காய குடும்பத்தைச் சேர்ந்ததே. ஆலியம் என்ற குடும்பத்தின் கீழ் இது வருகிறது. ஒவ்வொரு பூண்டிலும் 10 முதல் 20 பூண்டு பற்கள் உள்ளன. உலகில் பரவலாக பல இடங்களிலும் பூண்டு வளர்கிறது. அதன் மனமும் சுவையும் சமையில் அதனை தவிர்க்க முடியாத பொருளாக்கிவிட்டது. பண்டைய காலங்களில் உணவைவிட மருந்திலேயே பூண்டு அதிகம் சேர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் பூண்டை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். பூண்டில் சல்ஃபர் இருக்கிறது. டைஅலைல் டிசல்ஃபைடு மற்றும் அலைல் சிஸ்டைன் அதன் மருத்துவ வேதிப் பொருட்களில் முக்கியமானவை ஆகும். பூண்டில் உள்ள சல்ஃபர் ஜீரண மண்டலத்துக்குள் சென்று பின் அங்கிருந்து உடல் முழுவதும் பரவுகின்றது.
Garlic in Tamil
2. ஊட்டச்சத்து அதிகம், கலோரி குறைவு:
ஒரு பச்சைப் பூண்டு பல் (3 கிராம்) கொண்டுள்ள ஊட்டச்சத்து அளவு:
மான்கனீஸ் 2%
வைட்டமின் பி6 2%
வைட்டமின் சி 1%
செலீனியம் 1%
ஃபைபர் 0.06 கிராம்
இதுதவிர குறிப்பிடத்தக்க அளவில் கால்சியம், காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 உள்ளன. இதில் 4.5 கலோரிக்கள் உள்ளது. 0.2 கிராம் புரதம், 1 கிராம் கார்போஹைட்ரேட்ஸ் கொண்டுள்ளது.
Garlic in Tamil
3. சளி தொல்லைக்கு
பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் பூண்டு சாப்பிடக் கொடுத்து 12 வாரங்களுக்கு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவ்வாறாக சாப்பிடவர்களுக்கு காமன் கோல்ட் எனப்படும் சளித் தொல்லை ஏற்படும் வாய்ப்பு 63சதவீதம் குறைவாக இருந்தது. சளியால் பாதிக்கப்பட்டவர்கள் பூண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு சளித் தொல்லை இருக்கும் நாட்களும் குறைந்தது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
4. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
கார்டியோ வாஸ்குலார் டிசீஸ் எனப்படும் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகளில் இருந்து பூண்டு தற்காக்கும் குணமுடையது. உயர் இரத்த அழுத்தம்தான் இந்த நோய்கள் ஏற்பட முக்கியக் காரணி. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பூண்டுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
Garlic in Tamil
5. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்
பூண்டு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.
6. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது
பூண்டில், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. இதில் உள்ள அம்சங்கள் டெமென்சியா, அல்சைமர் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிகளவில் பூண்டு பயன்பாடு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் என்ஸைம்களை அதிகரிக்கிறது.
7. நீண்ட ஆயுளுக்கு பூண்டு:
பூண்டு நீண்ட ஆயுள் தரக்கூடியதாகும்.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. தொற்று நோய்களை அண்டவிடாமல் வைக்கிறது. இவற்றால் மனிதனின் ஆயுட்காலம் அதிகமாவதற்கு பூண்டு வழிவகை செய்கிறது.
Garlic in Tamil
8. விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பூண்டு:
பூண்டு விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. அயர்ச்சியைப் போக்கும். உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் போது தேவையான சத்துக்களைத் தரும். பண்டைய கிரேக்க காலத்தில் ஒலிம்பிக் வீரர்களுக்கு பூண்டு கொடுக்கப்பட்டது.
9. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும்
பூண்டு உடலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் தன்மை கொண்டது. கார் பேட்டரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு 4 வாரம் தொடர்ந்து பூண்டு சேர்த்த உணவு வழங்கப்பட்டு அவர்களின் இரத்த மாதிரி சோதிக்கப்பட்டது. அதில் முன்பைவிட அவர்களின் இரத்தத்தில் 19சதவீத காரீயம் அளவு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை நீக்க வல்லது.
Garlic in Tamil
10. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பூண்டு எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவைக் கூட்டும். ஆஸ்டியோஆர்த்திரிட்டிஸ் நோயால் அவதிப்படுவோர் பூண்டு, வெங்காயம் உணவில் சேர்ப்பது அவசியம்.
11. உணவில் சேர்ப்பது எளிது
பூண்டின் சுவையும், மனமும் அலாதியானது. சைவம், அசைவம் என பலதரப்பட்ட உணவுகளுடன் பொருந்திப் போகும். அதனாலேயே அதை பல வகை உணவில் சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. பூண்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துதல், அலர்ஜியை உருவாக்குதல் போன்ற சில அசவுகரியங்களும் உள்ளன. இரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வோர் பூண்டை மருத்துவரின் ஆலோசனைப் படி உட்கொள்வது நல்லது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu