தலைமுடி அதிகமா கொட்டுதா ? வழுக்கை விழ ஆரம்பிக்குதா ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் .... ட்ரை பண்ணி பாருங்க !.. ஒரு முடி கூட கொட்டாது ..!
X
By - jananim |21 Nov 2024 9:00 AM IST
உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா? இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா? முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் சில வழிமுறைகளை பார்க்கலாம் .
உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி , வழுக்கை விழ ஆரம்பிக்குதா? இதனால ரொம்ப கவலைப்படுறீங்களா ? முக்கியமா தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும், பயனில்லையா ? கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன. அதில் சில ,
ஆளிவிதை (Flaxseed) :
- ஆளிவிதையில் (Flaxseed) ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
- அப்படி கொதிக்கும் போது, அதிலிருந்து ஓர் ஜெல் போன்று வரும், அப்போது இறக்கி குளிர வைத்து, அந்த ஜெல்லை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- ஆளி விதைகள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதைகளில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளதால் வைட்டமின் ஈ மாத்திரைகள் பயன்படுத்துவதற்கு பதிலாக ஆளிவிதை எண்ணெயை நேரடியாக உச்சந்தலையிலும் முடிகளிலும் தேய்க்கலாம். இது முடியை பலப்படுத்துவதோடு அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெங்காயம் (Onion) :
- வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
- இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான்.
இளநீர் (Coconut water) :
- இளநீரில் உள்ள தேங்காயை அரைத்து சாறு எடுத்து, அதனை முடியின் வேர்ஜ்களில் படும்படி தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முடியை அலச வேண்டும். இந்த முறை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய் (Castor oil and Nelly oil) :
- விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் தூங்குவதற்கு முன்பு, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்
நெல்லிக்காய் (Gooseberry) :
- நெல்லிக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் சிறப்பான பொருள். இது தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது.
- எனவே 6-7 உலர்ந்த நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
அதிமதுர வேர் (licorice) :
- இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, ஈரப்பதமாக்குகிறது, சுத்தப்படுத்துகிறது மற்றும் வேர்களை வளர்க்கிறது. வெறும் 2-3 பயன்பாடுகளுடன், மயிர்க்கால்களை வலுப்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை கணிசமாகக் குறைக்கலாம்.
- நிச்சயம் இந்த பொருள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த அதிமதுர வேருக்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது.
- எனவே 1/4 கப் அதிமதுர வேர் பொடியை சிறிது பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வழுக்கை உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலையில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.
செம்பருத்தி பூ (Hibiscus) :
- செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் செம்பருத்திப் பூ மயிர்கால்களை வலிமைப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் பொடுகுத் தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.
முட்டை மாஸ்க் (Egg mask) :
- முட்டையில் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முடியின் வேர்களில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu