கவலைய விடுங்க BSNL அறிவிச்ச புள் HD இலவாச டிவி !! கேபிள் இல்ல ....செட் ஆப் பாக்ஸ் தேவையில்ல ...!!!

கவலைய விடுங்க BSNL அறிவிச்ச புள் HD இலவாச டிவி  !! கேபிள் இல்ல ....செட் ஆப் பாக்ஸ் தேவையில்ல ...!!!
X
BSNL நிறுவனம் தனது நெட்வொர்க் வரிசையில் தனது படைப்பான புள் HD உடன் கூடிய டீவியை உருவாக்கி அறிமுகபடுத்தியுள்ளது .அதனைப்பற்றிய சில தொகுப்புகளை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில இப்ப இருக்க கால காட்டத்துல நம்மலாம் கேபிள் டிவி,செட் ஆப் பாக்ஸ்,டிஷ் அப்டினு போயிட்டு இருக்கப்ப BSNL மட்டும் காசே இல்லாம டிவி சேனல குடுக்குறாங்களாம்...நம்புறீங்களா ,நaம்பிதான் ஆகணும் இப்போதா அந்த நிறுவனம் இந்த புள் ஹச்டி ல காசு இல்லாம டிவி சேனல குடுக்குறத பத்தி சொன்னாங்க ..அது எப்படி ,என்னங்கறத பத்தி நாம தெரிஞ்சிக்கலாமா ...

தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஐபிடிவி என்ற சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது .பிஎஸ்என்எல் எப்டிடிஎச் BSNL FTTH கஸ்டமர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனமானது, தமிழ்நாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற அனைத்து டெலிகாம் கஸ்டமர்களுக்கும் உபயோகிக்கும்படியாக லைவ் டிவி சேவை (Live TV Service) கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஐஎப்டிவி (IFTV) சேவைக்கு இன்டர்நெட் தேவையில்லை.

இந்த டிவி சேனல்களை நேரடியாக ஆப் மூலம் பார்த்து கொள்ளலாம். ஆகவே, இதற்கு இன்டர்நெட் தனியாக தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது . இன்டர்நெட் இல்லாமலேயே இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவிகளை பார்த்து கொள்ளலாம்.கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே இலவசமாக சேவையை வழங்க தொடங்கிவிட்டது.

இந்த பிஎஸ்என்எல் ஐஎப்டிவி சேவை மூலம் ஃபபரிங் இல்லாமலேயே எச்டி தரத்தில் லைவ் டிவிகளை பார்க்க முடியும். இது கிட்டத்தட்ட கேபிள் டிவியை போலத்தான் இயங்கும் .இதற்காக பிஎஸ்என்எல் எப்டிடிஎச் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் லைவ் டிவி ஆப் (BSNL Live TV App) டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆப் மூலம் லைவ் டிவி சேனல்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக பே டிவி (Pay TV) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (ZEE5) ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம்.

அதாவது, பிஎஸ்என்எல் எப்டிடிஎச் கஸ்டமர்கள் இப்போது ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை பெற்றுள்ளார் என்று வைத்து கொள்வோம். அவருக்கு இந்த டிவி சேனல்கள் சலுகை கிடைக்கும். இந்த டிவி சேவைக்கு பயன்படுத்தப்படும் டேட்டாவுக்கும், பிராட்பேண்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்ட டேட்டாவுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே, பிஎஸ்என்எல் டிவி ஆப்-இல் இலவசமாக கிடைக்கும் டிவி சேனல்களை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்தலாம். இதுபோக சன்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கே டிவி, கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்கள் வேண்டுமானால், அதற்கு மட்டும் சந்தா கட்டணம் இருக்கும்.ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு கடும் போட்டி கொடுக்க வாய்ப்புள்ளது.

ஆனால், அதற்கும் இன்டர்நெட் கட்டணம் தேவைப்படாது. இதேபோலத்தான், இன்டர்நெட் கட்டணம் இல்லாமலேயே ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இந்த பிஎஸ்என்எல் லைவ் டிவி ஆப் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு டிவி (Android TV) வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே இந்த டிவி சேனல்கள் சலுகையை பெற்று கொள்ள முடியும் என்பது தெரிகிறது. இந்த பிஎஸ்என்எல் சேவையானது, கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே அதுபோன்ற சலுகைகளை கொடுக்கிறது. அதுவும் மத்திய அரசின் நிறுவனம் இதை வழங்குவதால் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

இந்தியாவிலேயே முதலில் தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி சேவைக்கு முன்னதாகவே பிஎஸ்என்எல் நிறுவனம், வை-பை ரோமிங் சேவையை (Wi-Fi Roaming Service) தொடங்கியது. இந்த சேவை மூலம் பிராட்பேண்ட் இன்டர்நெட்டை வை-பை மூலமும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மொபைல், டிவி டேட்டாவுக்கும் பிஎஸ்என்எல் கை கொடுத்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்து களமிறக்கி வருகிறது.

இம்மாதிரியான சேவைகளை BSNL நிறுவனமானது வழங்கி வருகிறது.இந்த மாதிரியான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து அதனை நாம் பயன்படுத்தி கொண்டு நம் சந்தோசத்தினை வெளிப்படுத்தி மகிழ்வோம் .

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு