பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ இந்த நட்ஸ் & ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil

பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ  இந்த நட்ஸ் &  ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil
X
ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களும், பலன்களும் மிக அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று இன்னும் சில நன்மைகள் உண்டு.

நட்ஸ் ( Nuts ) என்பது இன்று பெரும்பாலும் விரும்பி உண்ணும் உணவுப்பொருளாக உள்ளது.ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இயற்கை உணவுப் பொருட்கள். இதில் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின்கள், சத்துக்கள், மற்றும் நல்ல கொழுப்புகள் (healthy fats) அதிக அளவில் உள்ளன.

நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

தினசரி உணவில் (Dry fruits and Nuts benefits in Tamil) நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்க்கப்படும்போது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதனால் உடலும் நலம் பெறும். நோய்கள் நம்மை அண்டாது.இதை சாப்பிடும் போது மீண்டும் மீண்டும் சாப்பிட தோணும். ஆனால் அளவாக தான் சாப்பிட வேண்டும்.சிறியவரக்ள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருள்.

ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் | Dry fruits and Nuts benefits in tamil

ஆரோக்கியமாக இருக்க உலர் பழங்களை( Dry fruits ) சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்பது வழக்கம். உலர் பழங்களில் பல வகைகள் உள்ளன. இதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, அத்திப்பழம் போன்றவை அடங்கும். உலர் பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதுவும் சாப்பிட்டால் அனைவருக்கும் பிடிக்கும்.மீண்டும் சாப்பிட தோணும் பொருள்.இது நம் உடலுக்கு மிகவும் நல்லது.



நட்ஸ் & ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of Eating Nuts & Dry Fruits

1. ட்ரை ஃப்ரூட்ஸ்( Dry fruits ) மற்றும் நட்ஸ்( Nuts ) வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்களும், பலன்களும் மிக அதிகம்.

2. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸ்( Dry fruits ) மற்றும் நட்ஸ்( Nuts ) வகைகளைச் சாப்பிட்டுவந்தால் பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3. ட்ரை ஃப்ரூட்ஸ் ( Dry fruits ) மற்றும் நட்ஸை ( Nuts )காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம் . காலை உணவு, வேலை இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.



நட்ஸ்& ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டால் கிடைக்கும் சத்துக்கள் | Nutrients Found in Nuts & Dry Fruits

1. பேரீச்சைபழம் | Dates benefits in Tamil

பேரீச்சை ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையில் பலன் தரும் பேரீச்சையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு பூப்பெய்தும் காலம் முதல் வயதான காலம்வரை பல்வேறு காலகட்டங்களிலும் உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுக்க வல்லது. இரத்தச் சோகை ஏற்படாமலும், அதைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு வைட்டமின் பி சத்து குறைவாகக் கிடைக்கும். பேரீச்சையை சாப்பிடுவதன் மூலம் அச்சத்தினை ஈடுகட்டலாம் என்பதுடன், கால்சியம், அயர்ன் சத்துகளும் அதிகமாகக் கிடைக்கும். எலும்புகள் பலம் பெறும்.இதனால உடல் நன்றாக இருக்கும். பேரீச்சை பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 2 பேரீச்சை பழம் சாப்பிடலாம்.

2. வால்நட் | Walnuts benefits in Tamil

வால்நட்டில் இருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் இதயத்துக்கு மிகவும் நல்லது. பலர் வால்நட் ஆயிலை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதைக் காட்டிலும் வெறும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இதயப் பிரச்சனையின் வீரியத்தைக் குறைக்கும் திறன் வால்நட்டுக்கு உண்டு. மற்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளுடன் ஒப்பிடும்போது வால்நட்டின் சுவை சற்றே கசப்பாக இருக்கும். அதனால் இதன் சுவை பிடிக்காதவர்கள், பிடித்த உணவுகளுடன் இதைச் சேர்த்துச் சாப்பிடலாம். வால்நட்டில் புரோட்டின் அதிகம். கொழுப்புச்சத்து குறைவு. எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அரை வால்நட் சாப்பிடலாம்.

3. பாதாம் பருப்பு | Badam benefits in Tamil

பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அவற்றை எப்படி சாப்பிடுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. பாதாம் பருப்பை பச்சையாகச் சாப்பிட்டால் பாதாமின் மேற்பகுதியில் இருக்கும் தோல்பகுதி செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். அதனால் பாதாமை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்தோ அல்லது வேர்கடலையை வறுப்பதுபோல எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தோல் நீக்கியோ சாப்பிடலாம். பாதாம் பருப்பைச் சாப்பிடுவதால் புரோட்டின் அதிகமாகக் கிடைப்பதுடன் முகப்பொலிவும் சருமப் பொலிவும் அதிகமாகக் கிடைக்கும். உடல் பொலிவாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஒபிஸிட்டி, இதயநோய் பிரச்சனை உள்ளவர்கள் சற்றே குறைவாகச் சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 - 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடலாம்.

4. அத்திப்பழம்:


அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் டி, அயர்ன் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதயப் பிரச்சனை உள்ளவர்களின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்ட அத்தி பழம், இரத்தச் சோகை உள்ளவர்களுக்கும் நல்ல பலன் கொடுக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு ஒரு அத்திப் பழம் சாப்பிடலாம்.

5. உலர் திராட்சை :

இன்றைய சூழலில் பெரும்பாலானோரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதனைக் குறைத்து, தொடர்ந்து மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கச் செய்யும் திறன் உலர் திராட்சைக்கு உண்டு. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் உலர் திராட்சைகளில், கருப்பு உலர் திராட்சை கூடுதல் பலன் தரக்கூடியது. மனிதர்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் அளவினையும், இரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவுக்கு குறைக்கும் உலர் திராட்சை பலருக்கும் அடிக்கடி ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் வராமலும் தடுக்கும். காய்ச்சல் சமயத்தில் உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைத்து விரைவில் குணம் பெறலாம். குழந்தைகளுக்கு உலர் திராட்சையை ஜுஸ் செய்தும் கொடுக்கலாம். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உலர் திராட்சை சாப்பிடலாம்.நாள் ஒன்றுக்கு 5 கிராம் உலர் திராட்சை சாப்பிடலாம்

6. அப்ரிகாட் :

குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய அப்ரிகாட்டின் விலை சற்று அதிகம். வெளிநாடுகளில் இதனைப் பழமாகவே சாப்பிடுவார்கள். ஆனால், நம் இந்திய உணவுப் பழக்கத்தில் இதனை உலரவைத்து சாப்பிடுவது வழக்கம். அப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்து, கண் மற்றும் சருமத்துக்கு ஆரோக்கியம் தர வல்லது. ஒபிஸிட்டி, டயபடிக், இதய நோய் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் அப்ரிகாட்டை சாப்பிடக்கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு நபர் பாதி அப்ரிகாட்தான் சாப்பிடவேண்டும்.


7. பிஸ்தா பருப்பு:

பிஸ்தா பருப்பைச் சாப்பிடுவதால் பாஸ்பரஸ் சத்து அதிகம் கிடைத்து உடலை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கும். உடல் மினுமினுப்பாகவும், கூந்தல் வலிமையுடனும் இருக்கும். அதிக கொழுப்புச் சத்துள்ள பிஸ்தா பருப்பு உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு நல்ல உதவி செய்யும். உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் பிஸ்தா பருப்பை மிகக் குறைவான அளவில் சாப்பிடலாம். இதில் கொழுப்புச்சத்து இருப்பதால 65 வயதுக்கு அதிகமானோர் பிஸ்தா பருப்பைத் தவிர்ப்பது நலம். குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 3- 4 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடலாம்.

8. முந்திரிப் பருப்பு:

முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் அதிக கலோரி ஆற்றலும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் முந்திரிப் பருப்பில் கொழுப்புச்சத்து மிக அதிகமாக இருப்பதால் அதிக அளவில் சாப்பிடக்கூடாது. விளையாட்டு, நீச்சல் என அதிக உடல் உழைப்பைக் கொடுக்கும் குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் தினமும் முந்திரிப் பருப்பைச் சரியான அளவில் சாப்பிடலாம். 30 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் முந்திரி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர் நாள் ஒன்றுக்கு 2 முந்திரிப் பருப்பைச் சாப்பிடலாம். 30 வயதுக்கு அதிகமானோர் வாரத்துக்கு ஒருமுறை 2 - 4 என்ற அளவில் சாப்பிடலாம். உடல் வளர்ச்சிக்கு உதவும்.

அதிக அளவிலான சத்துகளைத் தரவல்ல நட்ஸ்களை வேலைக்குச் செல்வோர் ஒரு சிறிய பாக்ஸில் எடுத்துச்சென்று அலுவலக நேரத்தில் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக இதனைக் கொடுத்தனுப்பலாம். இவற்றின் விலை சற்றே அதிகம் தான் என்றாலும், துரித உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு முடிந்த அளவேணும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சாப்பிடலாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்