தாணு இயக்கும் பான் இந்தியா படம்! ஹீரோ யாரு தெரியுமா?

தாணு இயக்கும் பான் இந்தியா படம்! ஹீரோ யாரு தெரியுமா?
X
1997ம் ஆண்டு அறிமுகமான கிச்சா சுதீப், தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து புகழ் பெற்றார். அடுத்தடுத்து சில தோல்விப் படங்கள், பல வெற்றிப் படங்கள் என அவர் தன்னை மெருகேற்றி வந்து இப்போது கன்னட மொழி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் நீண்ட நெடுநாட்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவரது தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளியான நானே வருவேன் படம் கடைசியாக வந்த படங்களில் சொல்லிக் கொள்ளும் வகையிலான படம். ஆனாலும் பெரிய அளவில் வசூல் இல்லாத காரணத்தால் தனுஷே அந்த படத்தை மறந்திருப்பார்.

1985ல் அர்ஜூன், நளினி நடிப்பில் யார் எனும் படம் மூலம் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தாணு. இவர் அடுத்தடுத்து விஜயகாந்தை வைத்து பல படங்கள் தயாரித்து வெளியிட்டார். பார்த்திபன், பிரசாந்த், நெப்போலியன், பிரபுதேவா, அப்பாஸ், சிவாஜி, நாசர், அஜித், மம்மூட்டி, கமல்ஹாசன், சூர்யா, விஜய், சிம்பு, எஸ் ஜே சூர்யா, விக்ரம், விக்ரம் பிரபு, அதர்வா, ரஜினிகாந்த், தனுஷ், கௌதம் கார்த்திக் என தமிழ் சினிமாவின் எல்லா நடிகர்களையும் வைத்து படம் தயாரித்துவிட்டார்.

பல படங்களை தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டும் வருகிறார். இவர் வெளியீட்டில் ஆளவந்தான் படமும் கபாலி படமும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டன. ஆளவந்தான் படத்தின்போது அது மிகப் பெரிய பட்ஜெட் படமாகவும், அதிக அளவில் செலவு செய்து விளம்பரம் செய்த படமாகவும் இருந்தது. அதேபோல கபாலிக்கும் இஷ்டம் போல செலவு செய்தார் தாணு. ஆனால் இரண்டு படங்களும் செலவு செய்த அளவுக்கு வசூலைத் தரவில்லை.

இப்போது தாணு பான் இந்தியா படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம். கிச்சா சுதீப் நடிக்கும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை இயக்க தெலுங்கு அல்லது தமிழ் இயக்குநர்களில் யாரோ ஒருவரைத் தேடி பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

1997ம் ஆண்டு அறிமுகமான கிச்சா சுதீப், தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து புகழ் பெற்றார். அடுத்தடுத்து சில தோல்விப் படங்கள், பல வெற்றிப் படங்கள் என அவர் தன்னை மெருகேற்றி வந்து இப்போது கன்னட மொழி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

சில ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் சுதீப் நடித்திருக்கிறார். நான் ஈ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அவர் நேரடியாக நடித்த முதல் தமிழ்ப்படம் புலி. மேலும் முடிஞ்சா இவன புடி எனும் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு பான் இந்தியா படங்கள் என மொழி மாற்றி தமிழில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது !.. 5 டிப்பா் லாரிகள் பறிமுதல்