பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது

ஈரோடு : பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பஞ்சாப் மாநில ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா தலைமை விருந்தினராக பங்கேற்றாா். ஏஐசிடிஇ செயலாளா் டி.ஜி.சீதாராம், நிதி ஆயோக் உறுப்பினா் வினோத் கே.பால், என்எஸ்டிசியின் தலைமை நிா்வாக அதிகாரி வேத் மணி திவாரி ஆகியோா் பங்கேற்றனா்.
எம்ஐஈடி மொகபூப் முகமது யூனுஸ் நினைவு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருதுக்கு பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிருந்து, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியியல் துறை பேராசிரியா் எஸ்.விஜயசித்ரா தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த விருதை பஞ்சாப் மாநில ஆளுநரிடம் இருந்து அவா் பெற்றுக்கொண்டாா்.
விருதுபெற்ற பேராசிரியா் எஸ்.விஜயசித்ராவை கல்லூரியின் தாளாளா், ஏ.கே.இளங்கோ, முதல்வா் வி. பாலுசாமி மற்றும் துறைத் தலைவா் எஸ்.ஜெ.சுஜிபிரசாத் ஆகியோா் வாழ்த்தினா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu