Jailer Leaked ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்த செயல்! தலையில் துண்டைப்போட்ட படக்குழு!
ஜெயிலர் படத்தின் விமர்சனங்கள் Jailer Review in Tamil பாசிடிவாக வந்துகொண்டிருக்கும் நிலையில், சில ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்ய செயலால் மற்ற ரசிகர்களும், படக்குழுவும் தலையில் கை வைத்து உக்காரும்படி ஆகிவிட்டது. அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயிலர் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார், இதில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி மற்றும் மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஒரு சிறையில் நடக்கிறது, அங்கு ரஜினிகாந்த் ஒரு சிறை அதிகாரியாக நடிக்கிறார். திரைப்படம் சில சிறைவாசிகளின் கதையைப் பின்தொடர்கிறது, அவர்கள் ஒரு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரஜினிகாந்த் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கிறார்.
ஜெயிலர் என்பது ஒரு வேடிக்கையான, சுவாரஸ்யமான மற்றும் புத்திசாலித்தனமான திரைப்படம். இப்படம் சில நல்ல யோசனைகளைக் கொண்டுள்ளது மற்றும் அவை நன்றாகச் செயல்படுத்தப்படுகின்றன.
ரஜினிகாந்தின் நடிப்பு அற்புதமானது, அவர் ஒரு சிறந்த சிறை அதிகாரியாக நடித்துள்ளார். தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நன்றாக நடித்தனர். இப்படத்திற்கு அனிருத்தின் இசை ஒரு பெரிய பலம், மேலும் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளன.
இந்நிலையில் படம் இன்று வெளியாகியிருக்கிறது ஆனால் நேற்றே கிளம்பி ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டுவிட்டார்.
தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் முன்னதாகவே ரிலீஸ் ஆகிவிட்டது. இதனை மற்ற இடங்களில் பார்த்த ரசிகர்களில் சிலர், ரஜினிகாந்த் டைட்டில் கார்டு, அவரின் அறிமுக காட்சி, மோகன்லால், சிவராஜ்குமாரின் காட்சிகள், இண்டர்வெல் பிளாக் என அனைத்தையும் மொபைலில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிட்டனர்.
தலைவரைக் காண்கிறோம் என்கிற ஆர்வத்தில் அவர்கள் அப்படி செய்துவிட்டனர். இது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதனால் படத்தின் மீதான சுவாரஸ்யம் ரஜினி ரசிகர்கள் அல்லாத மற்றவர்களுக்கு குறைந்துவிடும் எனவும், அவர்கள் திரையரங்குகளுக்கு வரமாட்டார்கள் எனவும் படக்குழு வருத்தத்தில் இருக்கிறது.
இதனிடையே படக்குழுவுக்கு பேரிடியாக இன்னொரு தகவல் வந்துள்ளது. ஜெயிலர் படத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது ஒரு பைரஸி நிறுவனம். Jailer Movie Watch Online
காட்சிகளை லீக் செய்வது சட்டப்படியும் குற்றம்தான். அப்படி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என இந்திய அரசு சட்டமே இருக்கிறது. அதன்படி இதனை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறார்களாம். உங்களிடம் இப்படி ஒரு வீடியோ வந்தால் அதை கண்டுக்காமல் போய்விடுங்கள். ஷேர் செய்வதோ ஸ்டேட்டஸ் வைப்பதோ வேண்டாம்.
ஜெயிலர் திரைப்படம் Jailer Review in Tamil நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதனை அப்படியே விட்டுவிடுவது சிறந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu