திரைப்படப் பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை..!
தூரிகை.
Kabilan Lyricist -திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாடலாசிரியர் கபிலனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் என இரண்டு பிள்ளைகள். இவர்களில் தூரிகை கபிலன் என்கிற மகள்தான் மூத்தவர். இவர்தான், சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து உயிரிழந்த தூரிகை கபிலன், Being Women என்ற பெண்களுக்கான ஆங்கில இதழின் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இதன் முதல் பதிப்பை கடந்த 2020 செப்டம்பர் மாதம் இயக்குநர் பா.ரஞ்சித், சேரன், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டிருந்தனர்.
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலேயே இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தூரிகை கபிலன் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது (09/09/2022), அவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூரிகையின் போனை பறிமுதல் செய்துள்ள அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu