உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!
தற்போது உள்ள இந்த நவீன உலகத்தில் நம் அனைவரும் மொபைலில் அடிமை என்ற நோக்கில் அதன் வலையில் விழுந்துகிடக்கின்றோம். இதனின் மூலம் மனித மூளை செயல்பாடுகளும் குறைந்து கொண்டே செல்கிறது ஏன் விழிப்புணர்வு நம்மிடயே தேவை என்பதை இங்கு உணர்த்துகின்றனர்.
தனக்குள் உள்ள பிரச்சனையை அதாவது மொபைல் அடிக்சன் ,போதை அடிக்சன் போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண, தானே முன் வந்து தன்னுடைய பாதிப்புகளை உணர்வது சுய நோயறிதல் (Self Diagnosis) என்று கூறுவர் .
தற்போது மனிதன் தன்னுடைய நோயினை அறிந்து அதனை கூகுளில் தேடி அதனை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் கூகுள் ஆனது பலவகையில் நமக்கு பதில் அளிக்கும் .இப்படியெல்லாம் நம் கூகுளில் தேடும் பொது தேவையில்லாத பல சிக்கல்களையும் பயத்தினையும் உண்டாக்குகின்றது .குறிப்பாக ஒருவர் தேடும் பலவகையான பிரச்சனைகளை சேர்த்து கூறுகின்றது இதனை அறிந்த மக்கள் அதனின் மூலம் மன நோயில் உள்ளாகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .
இணையத்தில் கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அதிகார பூர்வ தகவல் அல்ல என்ற விழிப்புணர்வை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும், இம்மாதிரியான தேடுதல்களுக்குக்கு பிறகு உங்களுக்கு தீர்வானது கிடைக்காமல் அதன்மூலம் பல மனப்பிரச்சனைகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விடுவீர்கள்.
மனநல பிரச்சனை என்பது நம்மால் உணர முடியாது அது மற்றவர்களின் கண்களில் நாம் செய்யும் செயலில் வெளிப்படும் ஒரு நோயாகும். வேலைப்பளு இருப்பவர்களுக்கு ,உறவு தகராறு ,மனஅழுத்தம் உள்ளவர்கள் (Mood Swings) என்ற மனநிலை நடைபெறும் . இது பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக காணப்படுகின்றது என்றால்,நாம் உடனே கூகுளில்(Mood Swings) பற்றி தேடுவோம்,ஆனால் பைபோலார் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder) என்ற தவறான மனநோயினை உங்களுக்கு கூறி மேலும் மனதை பாதிக்கும்.
உதாரணத்திற்கு நம் வீட்டில் உள்ள மர பொருட்களில் ஏதோ ஒரு பிரச்சனை என்றால் நாம் தச்சர் வேலை செய்பவர் அழைத்து அதற்கு தீர்வு காண்போம்,அதற்குமாறாக நாம் மூட்டை தூக்கும் தொழிலாளியை வைத்து வேலைவாங்க முடியாது.எனவே மக்கள் தங்களுக்கு என்ன தேவை அதை யாரிடமிருந்து பெறவேண்டும் என்ற மேலோட்டமான விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு அம்மாதிரியான நோய் தீர்வுகளுக்கு நன்கு படித்து பட்டம் பெற்று மக்களுக்கு உயிர்காக்கும் ஜீவன்களாக இருக்கும் மருத்துவர்களை அணுகுவது நல்லது என்று கூறப்படுகின்றது .அவர்களின் மூலம் மட்டுமே நமது உடலில் ஏற்படும் நோய்களையும் அதற்கு ஏற்ற முறையான தீர்வுகளையும் வழங்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu