கம்ப்யூட்டர்ல வேலைபாக்குறீங்களா? அடிக்கடி கண் எரியுதா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க..!

டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் போது கண்களுக்கு இடைவெளி விடுங்கள்.அவ்வப்போது 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 வினாடிகள் பாருங்கள்.

இந்த உலகில் கண்பார்வை சம்பந்தமான பிரச்சனைகளில் பல லட்சம் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில், பார்வை குறைபாடு , பார்வை சம்பந்தமான பிரச்சனைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பாதுகாத்து கொள்ள அறிஞர்கள் கண் மருத்துவ சம்பந்தமானவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பார்வையற்றோர் தடுப்புக்கான சர்வதேச நிறுவனம் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த தினத்தின் நோக்கமாக நமது கண்களில் பார்வை இழப்பு பார்வை குறைபாடு போன்ற தாக்கத்தில் இருந்து தங்களது கண்களை பாதுகாத்து கொள்ளும் விழிப்புணர்வை உணர்த்துவதே ஆகும் . அதுமட்டுமல்லாமல் ""உங்கள் கண்களை நேசியுங்கள் ""என்ற வாக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பானது செயல்படுகிறது .

இந்த கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள நாம் பலவகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்ற கட்டாயத்தியில் நாம் உள்ளோம். அதனால் நாம் நம் குழந்தை பருவத்திலோ அல்லது நமது குழந்தைகளுக்கு இப்போது இருந்தே எந்த பாதிப்பும் வரமால் தடுக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த கருத்தின்படி கண்புரை பிரச்சனைகளை குழந்தை பருவத்திலேயே நம் குணபடுத்திவிட்டால் மட்டுமே அதிலிருந்து தப்பிக்கமுடியும் என்ற என்னத்தை கொண்டு செயல் பட வேண்டும். எனவே ,கிளினீகல்ஸ் ஹாஸ்பிடல் கண் மைய இயக்குனர் மருத்துவர் ரவீந்திர மோகன் அறிவுறுத்திய தகவல்களை நாம் பின் வருமாறு காண்போம் :

"இந்த நோயின் அறிகுறிகளாக உள்ள காரணங்களாகி திகழ்வது முதலில் நாம் அதிக நேரம் அதிக ஒளி திரையினை பார்த்து வேலை செய்வது முக்கியமான காரணியாக உள்ளது. நாம் அப்படி வேலைபார்க்கும் போது நாம் அதற்கான இடைவெளிகளை கொண்டு செயல்பட வேண்டும் சிறிது நேரம் நம் கண்களுக்கு ஓய்வு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.அதாவது சிறிது நேரம் வேலை செய்து பிறகு கண் அசைவுகளை மாற்றி வேலைகளை செய்ய வேண்டும் .பிரகாசமான ஒளி திரைகளில் வேலைபார்க்கும் பொது கண்களை சிமிட்டாமல் வேலை செய்தல், டிஜிட்டல் முறையில் கண்பார்வை பிரச்சனை உருவாகுவதற்கு காரணமாக உள்ளது . கண்பார்வை மங்குதல் மற்றும் கண் சம்பந்த பிரச்சனை மட்டுமே இதற்கு அறிகுறியாக இருக்காது அசௌகரியம், கண் சோர்வு, தலைவலி மற்றும் கழுத்து மற்றும் முதுகுவலி போன்றவைகளும் அறிகுறியாக இருக்கின்றன .பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிக்க பட்டவர்களுக்கு இந்த கண்புரை நோய் அறிகுறியாகவும் உள்ளது.அதனால் நாம் கண்களை கண் உடற்பயிற்சி போன்றவைகளை செய்து பாதுகாக்கலாம். பெரும்பாலும் அதிக ஒளியை தொடர்ந்து பார்த்தல் போன்றவற்றின் மூலம் இந்த மாதிரியான கண் பிரச்சனைகள் உருவாகும் .

இந்த கண்புரை நோய்க்கான சிகிச்சையாக கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் முழுமையாக குணமடைந்து விட முடியும். சிகிச்சையின் மூலம் கண்ணில் லென்ஸ் பொருத்தி அதன் மூலம் பார்வைகளை கொண்டு வர பல சாதனைகளை மருத்துவர்கள் தரப்பில் இவ்வுலகில் நிரூபித்து கொண்டு உள்ளனர் . தற்போது லேசர் சிகிச்சை, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அதி நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.இதன் மூலம் ஏற்கனவே பாதிக்கபட்டவர்கள் சிகிச்சை பெற்று குணமடைய வசதிகள் நிறைய காணப்படுகின்றன .முக்கியமாக நீரிழிவு நோயினால் இருப்பவர்கள் சிகிச்சை பெறுவது என்பது இங்கு வற்புறுத்தபடுகிறது.எனவே நமது கண்களையும் நமது குழந்தைகளின் கண்களை பாதுகாத்து வளமுடனும் நலமுடனும் வளருங்கள்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா