தொப்பை இருக்கனால பயப்படுறீங்களா !! கவலை வேண்டாம், அதற்கான டிப்ஸ் ....

சரியான உணவு முறைகள், உடற்பயிற்சி, போதிய உறக்கம், மது மற்றும் சர்க்கரையுள்ள பானங்களை தவிர்க்கும் பழக்கம், இதை அனைத்தும் பின்பற்றினால், நாம் தோப்பையை குறைக்க முடியும்.

தற்போது நம்முடைய அவசர உலகத்தில் நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் இந்த அவசர உலகத்திற்க்கு ஏற்றார் போல் அவசரமாக , அதாவது துரித உணவு வகைகளை பெரிதும் விரும்புகின்றனர் .இது மனித உடலுக்கு தீங்கு என்பதை யாரும் அறிவதில்லை ,எனவே இதனின் முக்கிய விளைவாக பெறக்கூடிய நோயாக ,இந்த உடல் பருமன் தொப்பை பிரச்சனை என்பது பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நோயாக உள்ளது .பலருக்கும் இப்பொது ஒரு பெரிய சவாலாக அமையக்கூடிய ஒரு நோயாக இந்த தொப்பை பிரச்சனை உள்ளது .தற்போதைய சூழலில் மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு 90 சதவிகிதம் முக்கிய காரணியாக இந்த தொப்பை இருக்கின்றது.

ஆய்வறிக்கையின்படி ஆண்களின் இடுப்பளவு தொப்பை 40 இன்ச்சாகவும் பெண்களுக்கு 35 இன்ச் அளவாக மட்டுமே வயிற்று சுற்றளவு இருக்கவேண்டும் ,இதனை மீறி வயிற்று பகுதியில் தொப்பை என்ற பகுதி பெரிதாக காணப்பட்டால் அது உடலில் கொழுப்பு அதிகப்படியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த கொழுப்பினால் பல பிரச்சனைகள் உண்டாகின்றன .குறிப்பாக இதய நோய்கள் மாரடைப்பு ,நுரையீரல் நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிலைப்பாடாக இருக்கின்றது.இந்த தொப்பையினால் ஏற்படும் விளைவுகள் பற்றி பின் வருமாறு காண்போம் ...

உடலின் அதிகமான கொழுப்பு தேக்கத்தினால் நமது வயிற்று பகுதி கொழுப்பு மூலம் பித்தப்பை, கணையம் மற்றும் கண்கள் போன்ற பல பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் .கணையத்தில் அழற்சி போன்ற பாதிப்புகளும் ஏற்படும். தொப்பையில் அதிக படியான கோழுப்புகள் காணப்பட்டால் வரும் காலத்தில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகப்படியாக உள்ளது என்று கூறுகின்றனர் ,பின்னர் காலத்தில் அதாவது வருகின்ற வயது முதிர்ந்த காலத்தில் கண் புரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

40க்கும் மேல் வயது உடையவர்கள் பெரும்பாலும் சந்திக்க கூடிய ஒரு நோயாக சர்க்கரை நோய் உள்ளது ,இந்த சர்க்கரை நோயிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்த தொப்பையானது முக்கிய காரணமாக விளங்குகின்றது . இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் போது அதிக சப்தத்துடன் கூடிய குறட்டை,உறங்கி கொண்டிருக்கும் போது ஏற்படக்கூடிய மூச்சுத்திணறல் ,ஒரு சிலருக்கு துக்கமின்மை போன்ற பாதிப்புகளை இந்த தொப்பையானது நமக்கு இலவச இணைப்பாக அளிக்கின்றது .இந்த இடுப்புவயிற்று கொழுப்பினால் பித்த நோய்கள் வரவாய்ப்புள்ளது. அதாவது பித்த பையில் நீர்த்தேக்கத்தில் பித்தக்கள் பிரச்சனை ஏற்பட்டு பெரிய பாதிப்பினை விளைவிக்கும் என்று கூறுகின்றனர் .

நாள்பட்ட நுரையீரல் அடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகப்படியான நபர்கள், அவர்களது அடி வயிற்றில் அதிக கொழுப்பு தேக்கம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றனர். நமது உடலை உயரத்திற்கு ஏற்ற எடையினையும் , நல்ல பழக்கவழக்கங்களையும் ,வயிற்று பகுதியில் கொழுப்பு தேங்குதல் போன்ற பாதிப்பில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க வழிவகை செய்து உடல் ஆரோக்கியத்தினையும் நீண்ட ஆயுளையும் பெற உழைக்க வேண்டும்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare