எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படம் எப்படி இருக்கு?
Bommai Review in Tamil - எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் பொம்மை. ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள பொம்மை படத்தை எஸ்.ஜே. சூர்யாவே தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. பொம்மையுடன் காதல் செய்யும் ஹீரோ என்ற வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டதால் இந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு உண்டாக்கியுள்ளது.
இயக்குநர் ராதா மோகன் படங்கள் மீது எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். அபியும் நானும், மொழி என எப்போதும் மனதை தொடும் படங்களை கொடுத்து தமிழகத்தில் நிறைய ரசிகர்களைக் கவர்ந்தவர் ராதா மோகன். ராதா மோகனும் எஸ் ஜே சூர்யாவும் மிகவும் வித்தியாசமானவர்கள் சொல்லப்போனால் நேர் எதிரானவர்கள் இதனால் கூட படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.
யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.
6 / 10
பொம்மை ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Bommai OTT Release Date & Digital Streaming Rights
நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew
திரைப்படம் : பொம்மை (2023)
வகை : Genre
மொழி : தமிழ்
ரிலீஸ் தேதி : ஜூன் 16
இயக்குநர் : ராதாமோகன்
தயாரிப்பாளர் : எஸ் ஜே சூர்யா
திரைக்கதை : ராதாமோகன்
கதை : ராதாமோகன்
நடிப்பு : எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு :
எடிட்டிங் :
தயாரிப்பு நிறுவனம் : ஏஞ்சல் ஸ்டூடியோஸ்
-
பொம்மை படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள்
படம் சுமாரான வரவேற்பை பெற்றிருப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர். எஸ் ஜே சூர்யா நடிப்புக்காக பார்க்கலாம் என ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர்.
ராதாமோகன் படம் என நம்பி போனது ஏமாற்றமடையச் செய்திருப்பதாக கூறியுள்ளனர் சிலர்.
பொம்மை கதைச் சுருக்கம்
பள்ளிப்பருவத்தில் காதலித்த பெண் தன்னை விட்டு போக இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாயகன், பெரிதாக வளர்ந்ததும் ஜவுளிக் கடை பொம்மைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். குறிப்பிட்ட ஒரு நிகழ்வின் போதுதான் அவருக்கு பெரிய பிரச்னை இருப்பது தெரிய வருகிறது.
அந்த நிகழ்வின்போது அவருக்கு தனது பள்ளி காதலியான நந்தினியின் முகம் நினைவுக்கு வர, அந்த பொம்மைதான் தன் காதலி நந்தினி என நினைத்து வாழத் துவங்குகிறான் நாயகன்.
கனவு உலகில் வாழும் நாயகனுக்கு பிரச்னை சரி ஆனதா இல்லை அதனால் என்ன பாதிப்பு வந்தது என்பதெல்லாம் மீதிக் கதை.
பொம்மை படம் எப்படி இருக்கு?
தனது வழக்கமான மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கதாநாயகன் எஸ்.ஜே. சூர்யா. சில இடங்களில் மிதமிஞ்சிய நடிப்பால் நம்மை பயமுறுத்திப் பார்க்கிறார். ராதாமோகனையும் மீறி சில இடங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என தோன்றுகிறது. கதாநாயகியாக வரும் பொம்மை அழகி பிரியா பவானி ஷங்கர் கதைக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
வழக்கமாக கதையில் கதாபாத்திரமாக வரும் நாயகி, இந்த கதையில் சில தேவைகளுக்காக அடக்கி வாசித்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது ராதா மோகனின் ஐடியா அந்த மாதிரியா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கதைக்கு பொருத்தமான நாயகி இவர் தான். எந்த ஒரு குறையும் இல்லாமல் அழகாக நடித்து அசத்திவிட்டார். இவர்கள் தவிர சாந்தினியும் குறிப்பிட்ட சொல்லப்படவேண்டிய நடிப்பை காட்டியிருக்கிறார்.
இயக்குனர் ராதாமோகன் படம் என எதிர்பார்த்து திரையரங்கு வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே. வித்தியாசமான கதைக்களம் என்றாலும், சுவாரஸ்யம் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் சிம்ப்ளி போரிங் என்று இளைஞர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு சமீப காலங்களில் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அவர் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நல்ல பாடல்கள் மட்டும்தான் கொடுப்பேன் என்றிருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எதுவும் பெரிய சிறப்பு இல்லை.
படத்தின் ஒரே பாசிடிவான விசயம் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கரின் கெமிஸ்ட்ரி மற்றும் நடிப்பு. ராதாமோகனின் டச் துளியளவும் இல்லை. இதே கதையில் பிருத்விராஜ் மாதிரி நடிகரை வைத்து முயற்சித்திருக்கலாம். அதுவும் தனது வழக்கமான ஃபீல்குட் படங்களைத் தந்திருந்தால் தமிழ்நாடு கொண்டாடியிருக்குமே.
-
பொம்மை ஓடிடி ரிலீஸ் தேதி
திரைப்படம் கடந்த ஜூன் 16 ம் தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்கில் வெளியான நாள் : ஜூன் 16
சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil
டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil
ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release
-
பொம்மை OTT: FAQ
பொம்மை ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Bommai out?
ஆம். பொம்மை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.
பொம்மை படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Bommai hit or flop?
பொம்மை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொம்மை படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Bommai ?
ராதாமோகன் பொம்மை திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Bommai Review Tamil
- Bommai Padam Eppadi Irukku
- S J Suryah starring Bommai Tamil Movie Review in Tamil
- Bommai Movie Review in Tamil
- Bommai released theatres in Chennai
- Bommai released theatres in Coimbatore
- Bommai released theatres in Tirunelveli
- Bommai released theatres in Madurai
- Bommai released theatres in Trichy
- tamil bomma padam
- bomma padam bomma padam bomma padam
- bomma padam padam
- bomma padam bomma padam bomma padam bomma padam
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu