கோட்டகுப்பம் நகராட்சி முதல் சேர்மன் ஆக ஜெயமூர்த்தி பதவி ஏற்பு
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சியின் முதல் சேர்மனாக எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி பதவி ஏற்றுக்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் புதிய நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19ஆம் தேர்தல் நடைபெற்றது, 22- ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
கோட்டக்குப்பம் புதிய நகராட்சியின் முதல் சேர்மனாக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு இன்று சேர்மனாக பதவி ஏற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து மதியம் சுமார் 2 மணி அளவில் ஜீனத் பீவி துணை தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு அவரும் பதவி ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு சி.பி.எம். கவுன்சிலர் பர்கத் சுல்தானா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.