டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;
TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை சார்நிலைப் பணிகளில் அடங்கிய நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கு 23.06.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
உதவி நிலவியலாளர் (நீர்வளத் துறையின் நிலத்தடி நீர் பிரிவு) -11 இடங்கள்
உதவி நிலவியலாளர் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை) - 29 இடங்கள்
சம்பளம்: ரூ.37,700 - ரூ.1,19,500
முக்கிய நாட்கள்:
அறிவிக்கை நாள்- 25.05.2023
இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்- 23.06.2023
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்- 28.06.2023 நள்ளிரவு 12.01 மணி முதல் 30.06.2023 இரவு 11.59 மணி வரை
வயது வரம்பு (01.07.2023 அன்றுள்ளபடி)
ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ /சீ.ம.,பி.வ மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்: குறைந்தபட்சம் 18 வருடங்கள்
ஏனையோர்" (ஆ.தி., ஆ.தி(அ), ப.ப., மி.பி.வ. (வ), மி.பி.வ. (ம) சீ.ம. மி.பி.வ., பி.வ., பி.வ.(மு) தவிர): 18 முதல் 32 வருடங்கள்
கல்வித்தகுதி:
பதிவுக் கட்டணம்:
நிரந்திரப் பதிவுக்கட்டணம் (அ.ஆ(நி) எண்.32, பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்தத்துறை, நாள் 01.03.2017-இன் படி திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் ரூ.150/-
தேர்வுக் கட்டணம்:
தேர்வுக்கட்டணச் சலுகை பெற தகுதியுடையவர்கள் தவிர பிற விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்வுக்கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:-
தேர்வுக் கட்டணம் ரூ.150/- ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) இணையவழியில் மட்டும் (இணைய வங்கி/ பற்று அட்டை/ கடன் அட்டை) விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளிற்குள் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சேவைக் கட்டணமும் இணைத்து செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் கட்டணச் சலுகைக்கான தகுதியின் அடிப்படையில்தான் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியும்.
இணையவழியில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமல், நேரடியாக செலுத்தும் வரைவு காசோலை/ அஞ்சலக காசோலை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
2. எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம்ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3. ஒருமுறைப்பதிவில் பதிவேற்றம்செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD/DVD/Pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
4. ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (One Time Registration ID) உருவாக்க அனுமதியில்லை.
5. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும்.
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here