திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக யோகா தின கொண்டாட்டம்

World Yoga Day Celebration in Thiruvannamalai District

Update: 2022-06-22 01:04 GMT

ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினார்கள்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு துறை மற்றும் நேரு யுவகேந்திரா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 45 நிமிடங்கள் யோகா செய்தனர். நிகழ்ச்சியை தமிழ்நாடு யோகாசன சங்க மாநிலத் தலைவர் சங்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சூரிய நமஸ்காரம், பாத அஸ்தாசனம், அர்த்தசக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை மாணவ, மாணவிகள் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தில் பிரம்மகுமாரிகள் ராஜயோக மையத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டு பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினார்கள்.அருணை கல்வி குழுமத் துணைத்தலைவர் எ. வ. வே. குமரன், முன்னிலை வகித்தார். பள்ளியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன் தலைமை வகித்தார். பள்ளியின் யோகா பயிற்சி ஆசிரியர் உமா அவர்கள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார் இறுதியில் தலைமை ஆசிரியர் தங்கதுரை நன்றி கூறினார்.

சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிலையத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் மாணவ மாணவிகளுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான யோகாசன பயிற்சிகள் பிராணாயாமம் மற்றும் இராஜயோக தியானப் பயிற்சியை பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் பயிற்சி அளித்தனர்.

போளூர் அடுத்த களம்பூர் தேர்வுநிலை பேரூராட்சி யில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த யோகா பயிற்சியை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தொடங்கி வைத்தார்.

மனவளக்கலை மன்ற தலைவர் சரவணன் செயலாளர் முரளி பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் உதவி தலைமையாசிரியர் செல்வகுமார் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆரணி சட்டப்பணிகள் குழு தலைவர் தாவூத் அம்மாள் தலைமையில் மூத்த வழக்கறிஞர் நாராயணன் யோகா பயிற்சி அளித்தார்.இந்தப் பயிற்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். உலகதிருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News