மார்கழி மாத பிறப்பையொட்டி திருவண்ணாமலை கோவில்களில் சிறப்பு பூஜை

அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருவெம்பாவை சொற்பொழிவு நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-12-16 02:29 GMT

 அண்ணாமலையார் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் இன்று  அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு  அதிகாலை முதல் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயில், நட்சத்திர கோயில், காஞ்சி, கலசப்பாக்கம் உட்பட செய்யாற்றங்கரைகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும், ஆரணி கோதண்டராமர், ஸ்ரீனிவாசபெருமாள், வரதராஜ பெருமாள்,  கண்ணமங்கலம் பெருமாள் கோயில், பெரிய அய்யம்பாளையம் ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர், போளூர் சம்பத்கிரி நரசிம்மர், படவேடு வேணுகோபாலசுவாமி, கோதண்டராமர், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில், பட்சீஸ்வரர் கோயில்,  வந்தவாசி, தென்னாங்கூர் உள்ளிட்ட பல்வேறு  கோயில்களிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Tags:    

Similar News