இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!

திருவண்ணாமலை நகரம் வட வீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மீட்பு

Update: 2024-05-09 03:15 GMT

கோவிலுக்கு சொந்தமான இடத்தினை அளவீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்

திருவண்ணாமலை நகரம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் அளவிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் திருவண்ணாமலை பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன . இவற்றில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் ஆணையாளர் உத்தரவுபடி கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

அதில் திருவண்ணாமலை நகரம் மூகாம்பிகை நகரில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான அருள்மிகு வட வீதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் வார்டு 1 பிளாக் 3 நகர புல எண் 50/2C மொத்தம் ஒரு ஏக்கர் இரண்டு சென்ட் உள்ளது.

இந்த இடத்தினை கண்டுபிடித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை மீட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் கோவில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணியை, தனி வட்டாட்சியர் திருநாவுக்கரசு ஆலய நிலங்கள், சுப்ரமணியன் தனி வட்டாட்சியர் ஆலய நிலங்கள் ,பரமேஸ்வரி செயல் அலுவலர் மற்றும் சின்ன ராஜா, சிவக்குமார் ,அருணாச்சலம், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேஷ், நில அளவையர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள், அடங்கிய குழுவினர் நேற்று வட வீதி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இரண்டு சென்டு நிலத்தினை அளவீடு செய்யப்பட்டு நில எல்லை கற்கள் நடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News