கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள்:தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது

Update: 2022-08-07 14:34 GMT

கலைஞர் திருவுருவச்சிலைக்கு திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெற்ற கருணாநிதியின்  நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணி அவைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ,முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், தொமுச மாவட்ட அமைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர செயலாளர் சௌந்தர்ராஜன் உட்பட திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி

முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆரணி தொகுதி திமுக சார்பில் கருணாநிதி  திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மணி தலைமையில் திமுக உறுப்பினர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

செங்கம்

கருணாநிதியின்  நான்காம் ஆண்டு நினைவு நாளான இன்று செங்கம் சட்டமன்ற தொகுதி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் பேரணியாக சென்று கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News