சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

Ozone Day Poster -திருவண்ணாமலையில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்

Update: 2022-09-19 23:45 GMT

சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ்.

Ozone Day Poster -திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. அப்போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்  காமராஜ், உதவி பொறியாளர்  சுகாசினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆர்டிஓ வெற்றிவேல், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News