திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-06-22 06:45 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் 1,              கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 35, ஆகிய 36 பதவி இடங்களை நிரப்புவதற்கு தேர்தல் கால அட்டவணை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 20.6.22 முதல் 27.6.22 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகின்றது. வேட்புமனு பரிசீலனை 28 ம் தேதி அன்று நடைபெறும்.  30 ஆம் தேதி அன்று பிற்பகல் மூன்று மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9 ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

பதிவான வாக்குகளில் எண்ணிக்கை 12 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நன்னடத்தை விதிகள் தேர்தல் முடிவு வரும் நாளான 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்  முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News