நீர் நிலையில் ஆவின் பால் நிலையம் குறித்து கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

நீர் நிலையை ஆக்கிரமித்து, ஆவின் பால் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

Update: 2022-07-24 07:07 GMT

நீர் நிலையில் கட்டப்பட்டுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையை ஆக்கிரமித்து, ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில்

திருவண்ணாமலை மாவட்டத்தில், நான்கு கிராமங்களில் உள்ள ஏரி, குளம், ஓடை ஆகிய இடங்களில், ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அமைப்பால், நீர்நிலைகளில் ஏற்படுத்தி இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது. புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில மனுதாரர் அளித்த புகார் குறித்து, மாவட்ட கலெக்டர் விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இல்லை என மாவட்ட கலெக்டர் முடிவெடுத்தால், ஆவின் நிறுவனம் கட்டுமானங்களை தொடரலாம்.என உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News