லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-10 02:41 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ( கோப்பு படம்)

திருவண்ணாமலை அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர் ஓடும் லாரியில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் ராகவன்நாயர். இவர், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சென்னம்மாள்.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ராகவன் நாயருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 7ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஒன்பதாம் தேதி அதிகாலை அவர் மருத்துவமனை முன்பு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வந்து அந்த வழியாக சென்ற லாரியின் முன் சக்கரத்தில் விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நோய் கொடுமை தாங்காமல் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு என்ன காரணம் என விசாரித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் பணியாற்றிய ஊழியர் நோய் கொடுமையில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை முன்பே இருந்து கிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News