ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-05-10 03:07 GMT

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன்

திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

மக்களின் தாகத்தை போக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் திமுக சார்பில் ஒன்பது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் இப்பொழுது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் 108 டிகிரியை தாண்டியுள்ளது. அதனால் மக்கள் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்பட்டு உள்ளனர் .அவசியம் இருக்கும் பட்சத்தில் மக்கள் வெளியே வருகின்றனர். அவர்களுக்கு தாகம் கணிப்பதற்கும் வெப்பத்தை போக்கி சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் இப்போது தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை கலைஞர் சிலை எதிரில் நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் எ.வ. வேலு வழிகாட்டுதலின் படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுனர் அணி உட்பிரிவான தந்தை பெரியார் அமைப்பு சாரா ஓட்டுநர் நல சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம், இளநீர், பப்பாளிப்பழம், வெள்ளரிக்காய் ,கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை மக்களுக்கு வழங்கி மக்களை வெப்பத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு நீராகாரப் பொருட்களை வழங்கினார்.

மேலும் மக்கள் வெப்ப நிலையில் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். உடல் குறைபாடு கொண்ட மக்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். மக்கள் வெப்ப நேரத்தில் நீர் ஆகார பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணை அமைப்பாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நல சங்க உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News