திருவண்ணாமலை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்

Update: 2023-03-21 08:59 GMT

வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை  திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வழங்கி பாராட்டினார்.

திருவண்ணாமலையில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு  பதக்கம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வழங்கினார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் தமிழக இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைக்க வேண்டும் என்று விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, மாவட்டந்தோறும் விளையாட்டு போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறார். திருவண்ணாமலையில் கடந்த மாதம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 12ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதல் நாளன்று 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, பேட்மிண்டன், கோ-கோ, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தது. தொடர்ந்து 2-வது நாளில் கால்பந்து, நீச்சல், கபடி, யோகா, ஆக்கி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை இன்று கலெக்டர் முருகேஷ் வழங்கி பாராட்டினார். இதில் 162 பேருக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் யோகா பிரிவில் பிரியதர்ஷினி என்ற மாணவியும் அவரது தாயாரான கிருஷ்ணவேணி உடற்கல்வி ஆசிரியரும் தங்கப்பதக்கம் வென்றனர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News