தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 3 நாள் மாநாடு நிறைவு பெற்றது

Update: 2022-04-25 05:37 GMT

தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாட்டின் நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி சிறப்புரை நிகழ்த்தினார்

திருவண்ணாமலை  டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மூன்று நாள் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்று பேரவையின் மாநில மாநாடு நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி பங்கேற்று நவீன தமிழகம், மொழி, மதம் என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கம்பன்  கலந்து கொண்டு  பேசினார். தமிழ்நாடு வரலாற்று பேரவையின் தலைவர் பேராசிரியர் கீதா கண்ணம்மாள் மற்றும் பொது செயலாளர் பேராசிரியர் சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் சமூக பொருளாதார வரலாறு,  அரசியல் வரலாறு, வரைவியல் போன்ற அமர்வுகளில் கருத்தரங்கம் மற்றும் நிறைவு விழா என பல்வேறு கட்டங்களாக சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News