ஏரி சீரமைப்பு பணிகள்: திருவண்ணாமலை ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஏரி சீரமைப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-12 14:35 GMT

ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவனந்தல் எரி பகுதியை,  இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ரூபாய் 2.50 கோடியில் சீரமைமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, தேவனந்தல் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு பிறகு 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரை பலப்படுத்துதல், வனம் மேம்பாடு, ஏரியின் நடுவில் சிறிய தீவு அமைத்தல், பசுமை வளர்ச்சி, பறவைகள் குடில் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது.

இந்த நிலையில், ஏரி சீரமைப்பு பணிகளை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது,  பணியை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News