செங்கம் ஒன்றியத்தில் திட்ட பணிகள் ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-30 01:45 GMT

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை  மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கோலா பாடி, கரியமங்கலம், பரமனந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு வீடுகள் தரமாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா என ஊராட்சிகளின் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் ஊரக வேலை திட்டத்தில்  நடைபெற்று வரும் தார் சாலை, சிமென்ட் சாலை, கால்வாய் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் செயல்பட்டு வரும் சமுதாய கழிப்பறை கட்டடம் , போன்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமனந்தல் அரசுப்பள்ளியில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை பார்வையிட்டு தரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

 ஊரக வேலைத் திட்ட பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ளும் இடத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி செயலாளர் களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு ஊராட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்,  அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News