பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனை ஓலை பாடிய அரசு மேல்நிலைப்பள்ளி 95.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.;
முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8 ம் தேதிவரை நடந்து முடிந்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியானது. திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 36- ஆவது இடத்தை பெற்றுள்ளது.
மாணவர்கள் 81.27 சதவீதமும், மாணவிகள் 91.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமே அதிகரித்திருக்கிறது.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தேர்ச்சி 79.13 சதவீதமும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 83.69 சதவீதமும், அரசு நிதியுதவி பள்ளிகள் 72.95 சதவீதமும், நகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி 82.11 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகளின் சதவீதம் 92.72 சதவீதமும், பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி 95.51 சதவீதமும், சமூக நலத்துறை பள்ளிகள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள பனை ஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 123 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ மாணவியர்கள் எழுதினார்கள். அதில் 117 மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். .
அப்பள்ளியை சேர்ந்த மாணவி சரோஜினிபிரியா 491 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். தேர்ச்சி விகிதம் 95.12 சதவீதமாகும்.
முதலிடத்தை பிடித்த மாணவி யை பள்ளி தலைமையாசிரியர் கோடீஸ்வரன், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ,பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
மேலும் இப்பள்ளியில் 450 க்கு மேல் : 8 பேர், 400 க்கு மேல் : 24 பேர் , 100/100 மதிப்பெண்கள் : 5 பேர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.